விஷாலின் ஆக்ஷன் படம் எப்படி இருக்கு.. ஸ்ரீரெட்டியின் விமர்சனத்த பாருங்க!

Recommended Video

ACTION MOVIE PUBLIC REVIEW | VISHAL | TAMANNAAH | YOGIBABU | SUNDAR C | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகர் விஷாலின் ஆக்ஷன் படம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலின் ஆக்ஷன் படம் நேற்று ரீலிஸானது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வழக்கமாக காமெடி படங்களை கொடுத்துவந்த இயக்குநர் சுந்தர் சி சற்று ட்ராக்மாறி அதிரடியான ஆக்ஷன் படத்தை கொடுத்துள்ளார்.

சுந்தர் சியின் ஆம்பள படத்தை தொடர்ந்து விஷால் 'ஆக்ஷன்' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தமன்னா, அகன்ஷா பூரி, சாயாசிங், ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபீர் சிங், யோகி பாபு, ஷா ரா, ஜார்ஜ் மரியான், ஆனந்தராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனம்

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஆக்ஷன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

வலுவான கதாப்பாத்திரம்

வலுவான கதாப்பாத்திரம்

படம் ஆக்ஷனில் ஹாலிவுட் படத்தை மிஞ்சிவிட்டதாக ரிவ்வியூவர்கள் தெரிவித்து வருகின்றனர். படத்தில் பெண்களுக்கு வலுவான கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமன்னாவின் ஆடை

தமன்னாவின் ஆடை

அதே நேரத்தில் படம் முழுக்க பில்டப் என்றும் கருத்து எழுந்துள்ளது. மேலும் தமன்னாவின் ஆடை ரொம்பவே மோசம் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பிலோ அவ்ரேஜ்

பிலோ அவ்ரேஜ்

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவரான ஸ்ரீரெட்டி, விஷாலின் ஆக்ஷன் படம் அதிரடியான ரிவ்வியூ கொடுத்துள்ளார். விஷாலின் படம், பிலோ அவ்ரேஜ், அதாவது சராசரிக்கும் குறைவாக உள்ளது.. பாவம்.. சாரி விஷால் ரெட்டி.. என தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள்

குற்றச்சாட்டுக்கள்

ஏற்கனவே விஷாலுக்கும் ஸ்ரீரெட்டிக்கும் இடையில் பிரச்சனை உள்ளது. விஷால் மீதும் ஸ்ரீரெட்டி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். இந்நிலையில் விஷாலின் ஆக்ஷன் படம் குறித்து ஸ்ரீரெட்டி விமர்சித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X