Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
'சாதுர்யம் பேசாதடி'... ஸ்ரீரெட்டிக்கு ஒரு டெடிகேட் பண்ணலாமா!
நடிகர் ராகவா லாரன்சின் சவாலை ஏற்க நடிகை ஸ்ரீரெட்டி மறுத்துவிட்டார்.
சென்னை: நடிப்பு திறனை நிரூபித்தால் படத்தில் வாய்ப்பு தருவதாக தெரிவித்த நடிகர் ராகவா லாரன்சின் சவாலை ஏற்காமல் நடிகை ஸ்ரீரெட்டி எஸ்கேப் ஆகிவிட்டார்.
தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார். தமிழில் பிரபல இயக்குநர்களான ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி., நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் மீது அவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சென்னை வந்த ஸ்ரீரெட்டி, இங்கு முகாமிட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையே முழு வேலையாக வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல தன்னை பாலியல் தொழிலாளி என்று கூறிய நடிகர் வாராகி மீது போலீசில் புகாரும் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
லாரன்சின் சவால்
இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பிரபல நடன இயக்குநரும், இயக்குநருமான நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அவர், மீடியாவிற்கு முன் தன் நடிப்புத் திறமையை ஸ்ரீரெட்டி நிரூபித்தால், நிச்சயம் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக தெரிவித்திருந்தார்.
நிரூபிப்பாரா?
இந்த சவாலை ஏற்று நடிகை ஸ்ரீ ரெட்டி தனது நடிப்பு திறனை அனைவர் முன்பும் நிரூபிப்பார் என எதிர்பார்த்தால், வெறும் வாய்சவடாலுடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.
வெறும் வாய் மட்டும் தானா
ராகவா லாரன்சுக்கு அவர் அளித்துள்ள பதிலில் "விவாதம்னு வந்தால் நீங்க (ராகவா லாரன்ஸ்) தோற்பது உறுதி. எனக்குத் திறமை இருக்கு. இரண்டு பேரும் உங்க படத்துல நடிப்போம். நீங்க தயாரா? நாம இரண்டு பேரும் சேர்ந்தா சூப்பரா இருக்கும்" என ஸ்ரீரெட்டி. தெரிவித்துள்ளார்.
பாட்டு டெடிகேட் பண்றோம்
ஸ்ரீரெட்டியின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது, ஒரு பாட்டு டெடிகேட் செய்யலாம் என தோன்றுகிறது. அது என்ன பாட்டுனா... "சாதுர்யம் பேசாதடி.என் சலங்கைக்குப் பதில் சொல்லடி" என்ன ஓ.கே.தான..
ஒன்லி டப்ஸ்மாஷ்
ஏற்கனவே ஒன்இந்தியாவுக்கு ஸ்ரீரெட்டி பேட்டி கொடுத்த போது கூட, அவரை நடித்து காண்பிக்க சொல்லி நாம் கேட்டோம். ஆனால் அவர் தனது டப்ஸ்மாஷ் வீடியோவை பாத்துக்கோங்க என நைசாக நழுவியது வேறு கதை.