#Petta படத்திற்கு எதிராக ஆந்திராவில் சதி: குண்டை தூக்கிப் போட்ட ஸ்ரீரெட்டி
சென்னை: பேட்ட படத்திற்கு எதிராக ஆந்திரா, தெலுங்கானாவில் சதி நடந்துள்ளதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் நேற்று ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படம் பற்றி நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாபியா
ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு தெலுங்கு பேசும் மாநிலங்களில் சில தியேட்டர்கள் தான் கிடைத்துள்ளதா? டோலிவுட் பட மாபியாவை நினைத்து வெட்கமாக உள்ளது என்று கூறி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் துப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி.

தற்கொலை
சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங், தில் ராஜுவை நினைத்து வெட்கமாக உள்ளது. அவர்கள் சிறு தயாரிப்பாளர்களை தற்கொலை செய்ய வைக்கும் சூழலை உருவாக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
குடும்பம்
விரைவில் அந்த 4 பேரும் தற்கொலை செய்வார்கள். கடவுள் இருக்கிறார். அவர்களின் மகன்கள், குடும்பங்கள் சந்தோஷமாக இருக்க முடியாது. டோலிவுட்டை பார்த்து வெட்கப்படுகிறேன். அந்த 4 பேர் தயாரிக்கும் தெலுங்கு டப்பிங் படங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும். மாபியா தலைவர்களை கொல்ல வேண்டும். பேட்ட வினியோகஸ்தர் அசோக் பாபு காரு சாரி என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ராணா
ஸ்ரீ ரெட்டி குற்றம் சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு நடிகர் ராணாவின் தந்தை ஆவார். முன்னதாக ஸ்ரீ ரெட்டி ராணாவின் தம்பி மீது பாலியல் புகார் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அரவிந்த் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை.


Click it and Unblock the Notifications











