பைனான்சியர் மீது பொய் புகார்: நள்ளிரவில் நாடகமாடி போலீசில் சிக்கிய ஸ்ரீரெட்டி
சென்னை: பைனான்சியர் சுப்பிரமணி விஷயத்தில் ஸ்ரீரெட்டி நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
ஸ்ரீரெட்டி ரெட்டி டைரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீரெட்டி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் ஸ்ரீரெட்டியை விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர்.

காவல் நிலையம்
சுப்பிரமணி விவகாரம் தொடர்பாக ஸ்ரீரெட்டி மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார். மாலை 3.30 மணிக்கு காவல் நிலையத்திற்கு சென்ற ஸ்ரீரெட்டியை விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் அவர் தெரிவித்த விஷயம்.

ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி முன்பு தெரிவித்தது போன்று சுப்பிரமணி குடிபோதையில் அவர் வீட்டிற்கு வரவில்லை. மாறாக ஸ்ரீரெட்டி தான் சுப்பிரமணியை தனது வீட்டிற்கு அழைத்து அவரை மது அருந்த வைத்துள்ளார். சுப்பிரமணிக்கு மது கொடுத்துவிட்டு ஸ்ரீரெட்டி ஜூஸ் குடித்துள்ளார். இதை அவரே விசாரணையில் தெரிவித்துள்ளார்.

வாடகை
சென்னையில் ஸ்ரீரெட்டி பெரிய பங்களாவில் வசித்து வருகிறார். அவருக்கு எப்படி பங்களாவில் தங்கும் அளவுக்கு வசதி என்று பலரும் வியந்தனர். இந்நிலையில் அந்த பங்களாவுக்கு சுப்பிரமணி வாடகை கட்டியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எச்சரிக்கை
ஸ்ரீரெட்டி நாடகமாடி தங்களின் நேரத்தை வீணடித்ததை உணர்ந்த போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். மேலும் சுப்பிரமணியுடன் சமாதானமாக செல்வதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டி ஆடிய இந்த நாடகத்தால் அவர் முன்பு பலர் மீது தெரிவித்த புகார்கள் கூட நாடகமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











