அனைத்து சினிமா பெரிய ஆட்களின் குடுமி என் கையில்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி
சென்னை: திரையுலகில் உள்ள அனைத்து பெரிய ஆட்களின் லீலைகள் குறித்த விபரங்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
சுசி லீக்ஸை அடுத்து பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது ஸ்ரீ ரெட்டி லீக்ஸ். தெலுங்கு திரையுலகில் புயலை கிளப்பியவர் தற்போது கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.
சென்னையில் செட்டில் ஆகியுள்ள அவர் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
காதல்
"SIRI"-க்கு எவ்வளவு தகவல் தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீக்கும் சினிமாவில் உள்ள பெரிய ஆட்களின் காதல் வாழ்க்கை முறை பற்றி அனைத்து தகவலும் தெரியும். பல பெண்களிடம் இருந்து இன்னும் தகவலை பெற்றுக் கொண்டிருக்கிறேன். திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும் மற்றும் பட வாய்ப்புக்காக பெண்கள் படுக்கைக்கு அழைக்கப்படுவதை தடுக்க முடியும் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

பெயர்
ஸ்ரீரெட்டியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்களோ அந்த பெரிய ஆட்களின் பெயர்கள், அவர்கள் செய்த லீலைகள் குறித்த விபரங்களை வெளியிடுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்ப்பு
சென்னைக்கு வந்த இடத்தில் ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. சில இயக்குனர்கள், நடிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழ் நடிகர் ஒருவர் தனது கெரியரை நாசமாக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார் அவர்.
ஃபீலிங்
சென்னையில் தனியாக இருக்கும் ஸ்ரீரெட்டி ஃபீலிங்கில் உள்ளார். வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு அம்மா பேச்சை கேட்காமல் போனதால் கஷ்ட்படுவதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











