twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஜா: திருவாரூரில் 300 பேருக்கு அரிசி, பிஸ்கட், தண்ணீர், மெழுகுவர்த்தி கொடுத்த ஸ்ரீ ரெட்டி

    By Siva
    |

    திருவாரூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூரில் 300 பேருக்கு நிவாரண பொருட்களை அளித்துள்ளார் ஸ்ரீரெட்டி.

    தெலுங்கு திரையுலகம் ஒதுக்கி வைத்த பிறகு நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னையில் செட்டில் ஆனார். அவர் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில் அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவி செய்துள்ளார்.

    திருவாரூர்

    திருவாரூரில் சுமார் 300 பேருக்கு தலா 2 கிலோ அரிசி, வாட்டர் பாட்டில்கள், மெழுகுவர்த்தி, குழந்தைகளுக்கு பிஸ்கட்டுகள் அளித்துள்ளேன். இது போன்று உதவி செய்வது என் கடமை. இந்த உலகம் என்னை தனிமைப்படுத்தியபோது தமிழ்நாட்டு மக்கள் தான் ஆதரித்தனர். நன்றி என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

    விமர்சனம்

    விமர்சனம்

    திருவாரூர் மக்களுக்கு உதவிய ஸ்ரீரெட்டியை பலர் பாராட்டினாலும், சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். என்ன உள்நோக்கத்துடன் இந்த உதவி செய்தீர்கள், இப்படியும் பப்ளிசிட்டி தேட நினைத்தீர்களா என்று கேட்டுள்ளனர்.

    உதவி

    தான் மக்களுக்கு உதவி செய்ததை விமர்சித்தவர்களை பார்த்து ஸ்ரீ ரெட்டி கூறியிருப்பதாவது, நாம் நல்லது செய்தால் சிலரால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. உடனே அவரை விமர்சிப்பார்கள். அவர்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என்கிறார்.

    ராகவா லாரன்ஸ்

    ராகவா லாரன்ஸ்

    ராகவா லாரன்ஸ் மாஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் அவர் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியை பார்த்தவர்கள் மாஸ்டருடன் சேர்ந்த உடனே அவரின் குணம் வந்துவிட்டது. அவரை போன்றே பிறருக்கு உதவத் துவங்கியுள்ளார் ஸ்ரீ ரெட்டி என்கிறார்கள்.

    English summary
    Actress Sri Reddy has given rice, water bottles, biscuit packs to nearly 300 people in Gaja affected Thiruvarur.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X