பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் தெலுங்கு திரையுலகை தெறிக்கவிட்ட ஸ்ரீ ரெட்டியா?
ஹைதராபாத்: நடிகை ஸ்ரீரெட்டியை பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் உள்ள பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. நடுத்தெருவில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி அனைவரையும் அதிர வைத்தார்.
இந்நிலையில் அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது.

ஸ்ரீ ரெட்டி
சும்மாவே பரபரப்பை ஏற்படுத்தும் ஸ்ரீ ரெட்டி பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றால் சர்ச்சைகளுக்கு குறைவே இருக்காது. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை தேர்வு செய்யக்கூடும் என்று கூறப்பட்டது.

சர்ச்சை
ஸ்ரீ ரெட்டி மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் டிஆர்பி கண்டமேனிக்கு ஏறும் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களின் பட்டியலில் அவர் பெயர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

போராட்டம்
ஸ்ரீ ரெட்டியை பிக் பாஸ் வீட்டில் தங்க வைத்தால் அவர் அசிங்கமாக பேசுவதுடன், அரை நிர்வாணமாக வந்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகிவிடுவார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அஞ்சுகிறார்களாம். அதனால் அவரை நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யவில்லையாம்.

நானி
பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் முதல் சீசனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். தற்போது அவர் படங்களில் பிசியாக இருப்பதால் 2வது சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்குகிறாராம்.

படம்
சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா ஸ்ரீ ரெட்டியை தனது படத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம். ஸ்ரீ ரெட்டியை தூண்டிவிட்டு நடிகர் பவன் கல்யாணை கெட்ட வார்த்தையால் திட்ட வைத்தார் ராம் கோபால் வர்மா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











