ராகவா லாரன்ஸை சும்மா விட மாட்டார் போன்று இந்த ஸ்ரீரெட்டி

By Siva

சென்னை: ஸ்ரீரெட்டி ராகவா லாரன்ஸை சும்மா விடுவதாக இல்லை.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டபோது நடிகை ஸ்ரீரெட்டி இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸின் பெயரையும் தெரிவித்தார்.

ஸ்ரீரெட்டி சொல்வதில் உண்மை இல்லை மீடியா முன்பு ஆடிஷன் வைத்து அவர் நன்றாக நடித்தால் என் படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்றார் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு ஆடிஷன் வைக்காமலேயே ஸ்ரீரெட்டிக்கு அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறப்பட்டது.

ஸ்ரீரெட்டி

காஞ்சனா 3 படம் ஹிட்டானதற்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க காத்திருப்பதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாஸ்டரின் படத்தில் என்னை பார்க்க எத்தனை பேர் விரும்புகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

ஸ்ரீரெட்டியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்தவர்கள் நீங்கள் ராகவா லாரன்ஸ் படத்தில் தயவு செய்து நடிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். சிலரோ நடிங்க, நடிங்க பார்ப்போம் என்கிறார்கள்.

ரீமேக்

ரீமேக்

காஞ்சனா 3 பட வெற்றியை அடுத்து ராகவா லாரன்ஸ் அக்ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீரெட்டி அவரை சும்மாவிடுவதாக இல்லை.

கோலிவுட்

கோலிவுட்

சென்னையில் செட்டில் ஆகி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது யாரை பற்றியாவது திட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடம் அடிக்கடி வசை வாங்குவது பவர்ஸ்டார் பவன் கல்யாண் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X