அப்பாடா.. நான் அவரோட லிஸ்ட்டுல இல்லை.. சிம்புவின் மகிழ்ச்சியைப் பாருங்க!
நடிகை ஸ்ரீரெட்டி ஒரு கேள்வி கேட்க அதற்கு பதிலளித்துள்ளார் நடிகர் சிம்பு
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி நடிகர் சிம்புவின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமீப காலங்களில் சமரசிம்மா ரெட்டியை விட அதிகமாக அதிர்ச்சியூட்டியது யாரென்றால் அது ஸ்ரீரெட்டி தான். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாக புகார் அளித்தார்.
ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆதாரம் உள்ளது என ஸ்ரீரெட்டி பதிலளித்தார்.

வீடியோ
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஸ்ரீரெட்டி புயலின் வேகம் குறைந்திருந்தது. இப்போது நடிகர் சிம்புவின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீரெட்டி கேள்வி
நடிகர் சிம்பு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இணைய ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டி, உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள் எனக் கேட்டார்.

கண் சிமிட்டல்
அதற்கு பதிலளித்த சிம்பு, ஸ்ரீரெட்டியின் லிஸ்டில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு.. என பார்வையளர்களிடம் சொல்லிவிட்டு பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.

பெண்கள் முன்னேற்றம்
ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாக தான் செய்யவேண்டும் என ஆசைப்படும் விஷயங்களை செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.

வீண் கற்பனை
அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்துகொள்ளாதீர்கள் எனக் கூறினார்.

வருங்கால மனைவி
பெண் என்பதற்கான சில விஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











