தப்பா டிரெண்டாகும் சித்தா பாடல்.. ஸ்ரீரெட்டி, நிகிதாலாம் ரீல்ஸ் போடுறாங்களே.. அது அர்த்தமே வேறடா!
சென்னை: ஒரு பாடல் ஹிட் அடித்து விட்டால் அது எல்லா மொழிகளிலும் பல இன்ஸ்டாகிராம் பியூட்டிகள் எல்லாம் புரியுதோ புரியவில்லையோ ரீல்ஸ் போட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர். கடந்த ஆண்டு சித்தார்த் தயாரித்து நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சித்தா படத்தின் "உனக்குத்தான்" பாடல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் செம டிரெண்டாகி வருகிறது.
ஒரு சித்தப்பாவுக்கும் அண்ணன் குழந்தைக்கும் இடையே உள்ள பாசப்போராட்ட பாடலை அப்பா, பொண்ணு பாடி ரீல்ஸ் போட்டால் கூட பரவாயில்லை. இன்ஸ்டாகிராமில் கில்மா வீடியோக்கள் போடுபவர்கள் எல்லாம் தற்போது ரீல்ஸாக போட்டு கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

சூப்பர் ஹிட் அடித்த சித்தா: அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் தயாரித்து நடித்த சித்தா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. கடந்த ஆண்டு குறைவான பட்ஜெட்டில் வெளியாகி அயோத்தி, குட் நைட், டாடா, ஜோ, பார்க்கிங் மற்றும் சித்தா உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. டக்கர் உள்ளிட்ட படங்கள் சித்தார்த்துக்கு தோல்வியை கொடுத்து வந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு சித்தார்த்துக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை இந்த படம் கொடுத்தது. அந்த படத்தின் இயக்குநர் அருண்குமார் அடுத்து சியான் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
டிரெண்டாகும் உனக்கு தான் பாடல்: சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சித்தா பட பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதிலும், இந்த "உனக்கு தான்" பாடலில் வரும் "அந்த அருவி போல அன்பை தருவாள்.. ஒரு அறிவிப்பும் இன்றி சுடுவாள்" வரிகள் அதிகமான ரசிகர்களை ஈர்க்க, அந்த வரிகளை வைத்து பலரும் பலவிதமாக ரீல்ஸ் போட்டு வருகின்றனர்.
நிகிதா ஷர்மா ரீல்ஸ்: 8.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி பெருங்கடலாக திகழும் நிகிதா ஷர்மா சித்தா பட பாடலை வைத்து செம கிளாமராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டூபீஸ் உடைகளில் அதிகமாக தனது தாராள அழகை காட்டி இணையத்தை சூடாக்கி வரும் நிகிதா ஷர்மாவையே இந்த பாடல் ஏதோ பண்ணியதாகவும் அதற்காகத்தான் இந்த ரீல்ஸ் என சமாளிப்பு கேப்ஷன் வேறு கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீரெட்டியும் விடல: தெலுங்கு திரையுலக சினிமா நடிகர்கள் மற்றும் தமிழ் திரையுலக நடிகர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வந்த ஸ்ரீரெட்டி சமீப காலமாக சைலன்ட்டாக இன்ஸ்டாகிராமில் கிளாமர் பொங்க உடையணிந்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரும் இந்த பாடலுக்கு கிளாமர் ரீல்ஸ் ஒன்று போட்டுள்ளார். கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் இது ரொமான்டிக் பாடல் இல்லை என்று தலையால் அடித்துக் கொண்டு கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











