எப்போ டாப்பை கழட்டினேனோ.. அப்பவே மானம் போயிடுச்சு.. காஸ்டிங் கௌச் லீலைகளை ஓபன் செய்த ஸ்ரீரெட்டி!

சென்னை: கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன் மீது நடத்திய காஸ்டிங் கௌச் பற்றிய லீலைகளை அம்பலப்படுத்தி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், விஷால், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் மீது ஏகப்பட்ட புகார்களை வெளிப்படையாக பேசி பரபரப்பை கிளப்பியவர் ஸ்ரீரெட்டி.

அரை நிர்வாண கோலத்தில் சாலையில் இவர் நடத்திய போராட்டம் பலரையும் ஷாக் ஆக்கியது.

சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி

சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி

சினிமா பிரபலங்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு பட வாய்ப்புகளை வழங்கவில்லை என ஸ்ரீரெட்டி பல பிரபலங்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், சர்ச்சை நடிகையாக மாறினார். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், நடிகர் விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது ஸ்ரீரெட்டி காஸ்டிங் கௌச் புகார்களை கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இயக்குநர்கள் அட்டகாசம்

இயக்குநர்கள் அட்டகாசம்

ஆடிஷனுக்கு சென்றால் இயக்குநர்கள் என்னை எப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றனரோ அப்படியெல்லாம் பார்க்க வித விதமாக போஸ் கொடுக்க சொல்வார்கள். பிகினி உடையில் வந்து நிற்க சொல்லி படு மோசமாக போஸ் கொடுக்க சொல்லி போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்துக் கொண்டு வாய்ப்பு தருவதாக சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆனால், அதை வைத்து அவர்கள் தங்கள் இச்சையை தீர்த்துக் கொண்டு எனக்கு எந்தவொரு வாய்ப்பையும் வழங்க மாட்டார்கள் என அந்த பேட்டியில் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் டார்ச்சர்

தயாரிப்பாளர்கள் டார்ச்சர்

இயக்குநர் ஒரு பக்கம் என்றால் தயாரிப்பாளர்கள் என்னை படுக்க வைத்து எந்த ஆங்கிளில் எல்லாம் வீடியோக்களை எடுக்க வேண்டும் என சொல்லி அவரும் தனது இச்சையை போக்கிக் கொள்வதிலேயே குறியாக இருப்பார் என்றும் கோலிவுட், டோலிவுட் என சினிமா துறைகளில் இது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது என்றும் பரபரப்பை கூட்டி உள்ளார்.

டாப்பை கழட்டியதும்

டாப்பை கழட்டியதும்

தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படியாவது தட்டிக் கேட்க வேண்டும் என நினைத்து என்னைக்கு நான் டாப்பை கழட்டி போராட்டம் நடத்தினேனோ அன்னைக்கே என் மானம், அபிமானம் எல்லாமே போச்சு என அந்த பேட்டியில் ஸ்ரீரெட்டி ரொம்பவே விரக்தியுடன் பேசியுள்ளது தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

பொய் புகார்

பொய் புகார்

திட்டமிட்டே பல பிரபலங்களை பழிவாங்கும் விதமாக ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார் என கோலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகத்தில் இருந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பின. ஆனாலும், தொடர்ந்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாகவும் தனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் பேட்டிகளில் கூறி வருகிறார் ஸ்ரீரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X