போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்.. பிரபல சர்ச்சை நடிகை அடுத்த அதிரடி.. திரையுலகில் பரபரப்பு
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் பற்றி பிரபல சர்ச்சை நடிகை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பாலிவுட்டிலும் கன்னட சினிமாவிலும் இந்தப் பிரச்னை தீவிரமாகி வருகிறது.
போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரியா சக்கவரத்தி
இந்தி நடிகை ரியா சக்கவரத்தி உள்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் நடிகை சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் உள்பட பலரை பெயரை போலீசாரிடம் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் பாலிவுட்டில் மேலும் சில பிரபலங்கள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

ராகிணி திவேதி
கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர். நடிகைகளின் நண்பர்களான ரவிசங்கர், ராகுல், போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, ஷேக் பாசில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

டாப் ஹீரோக்கள்
நடிகை ஆண்ட்ரிதா ராய், அவர் கணவர் திகாந்த் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். இந்நிலையில் தனது தகுந்த பாதுகாப்பு அளித்தால், போதைப் பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் பெயரை தெரிவிக்கத் தயார் என்று கூறியுள்ளார் நடிகை ஶ்ரீரெட்டி. இதுபற்றி அவர் தனது வீடியோ பதிவில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கூறியுள்ளார்.

வீட்டு பார்ட்டி
தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது இல்லாமல் பார்ட்டிகள் இல்லை. வாரிசு நடிகர்கள் நடத்தும் நடன பார்ட்டிகளிலும் இது இருக்கிறது. இதுமட்டுமல்ல பல ஒழுக்கக் கேடான விஷயங்களும் தெலுங்கு சினிமாவில் நடந்து வருகின்றன.
Recommended Video

ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளியே வரும். தெலங்கானா அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தால், இதில் சம்மந்தப்பட்டுள்ள டாப் ஹீரோக்கள், நடிகைகள் பெயரை தெரிவிக்கத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு நடிகை ஶ்ரீரெட்டி கூறியுள்ளார். கூடவே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்துவரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவையும் அவர் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











