ஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் 'இவரின்' டார்ச்சரால் தான் மாளவிகா திரையுலகை விட்டு வெளியேறினாரா?

By Siva

Recommended Video

மீண்டும் வந்து விட்டார் ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு நடிகர் மீது பரபரப்பு புகார்-வீடியோ

சென்னை: தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பற்றி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு, தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட்டு பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. அவரை தெலுங்கு திரையுலகம் ஒதுக்கி வைத்துவிட்டது.

இதையடுத்து அவர் சென்னையில் செட்டில் ஆகி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சென்னை

சென்னை

சென்னைக்கு வந்துவிட்டாலும் பாலியல் தொல்லை அளிக்கும் நடிகர்கள், இயக்குனர்களின் விபரங்களை தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இதற்கிடையே டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சென்னைக்கு வந்த நேரம் நல்ல நேரம் இனி தன் வாழ்க்கையில் எல்லாமே நல்லதே நடக்கும் என்கிறார் அவர்.

ராஜேந்திர பிரசாத்

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் நல்ல மனமுள்ளவர் இல்லை. அவரை உடனே ஏதாவது மனநல மருத்துவமனையில் அனுமதியுங்கள். உங்கள் அகராதியில் பெண்களுக்கு மதிப்பே இல்லை என்பது எனக்கு தெரியும். உங்களை பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவேன் சார் என்று ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

ராஜேந்திர பிரசாத் குறித்து என்ன தகவல் வெளியிடப் போகிறாரோ என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டது. என்னது, ஸ்ரீ ரெட்டிக்கு ரசிகர்களா என்று மட்டும் கேட்காதீர்கள். அவரின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு சென்று பாருங்கள், அப்பொழுது தான் தெரியும். நம்ம தமிழ் இளசுகள் எத்தனை பேர் அவரை தினமும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியும்.

நடிகைகள்

மிஸ்டர் ராஜேந்திர பிரசாத், நீங்கள் ஏன் மா அமைப்பில் இருந்து 6 மாதத்தில் வெளியேறினீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஹீரோயின் மாளவிகா ஏன் திரையுலகை விட்டு விலகினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை எப்படி எரிச்சல் அடைய செய்வீர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். உங்களின் மகள் ஏன் வீட்டை விட்டு ஓடினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். நடிகை ஹேமா ஏன் உங்களுடன் சண்டை போட்டார்? ஒரு சீனியர் நடிகராக உங்களை மதிக்கிறேன் ஆனால் மனிதனாக அல்ல என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X