விஷால் பற்றி படிக்க முடியாத அளவு அருவருக்கத்தக்க பதிவுகள்.. திடீரென பொங்கியெழுந்த ஸ்ரீ ரெட்டி..!

விஷால் பற்றி படிக்க முடியாத அளவுக்கு, அருவருக்கத்தக்க பதிவுகளை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் மிக நெருக்கத்தில் உள்ள நிலையில் நடிகர் விஷால் தொடர்பாக அருவருக்கத்தக்க வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பேஸ்புக்கில் பதிவுகளை வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் தொடர்ந்து சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாக பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.

மீண்டும் ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி

மீண்டும் ஆரம்பித்த ஸ்ரீ ரெட்டி

சில காலம் அமைதியாக இருந்தவர், சமீபகாலமாக மீண்டும் பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புத் தருவதாகக் கூறி, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியவர்கள் பற்றி புகார் கூறி வந்த ஸ்ரீரெட்டி, பிறகு பாதிக்கப்பட்ட மற்ற நடிகைகளுக்காகவும் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

ஆபாசப் பதிவுகள்

ஆபாசப் பதிவுகள்

சமயங்களில் கண் கூசும் அளவிற்கு ஆபாசமான பதிவுகளையும், போட்டோக்களையும் வெளியிடுவதையும் அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். தனது பதிவுகளால் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

விஷால் பற்றிய பதிவுகள்

விஷால் பற்றிய பதிவுகள்

இந்நிலையில், இன்று காலை முதல் அதிரடியாக விஷால் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார் ஸ்ரீ ரெட்டி. எதனால் திடீரென அவர் இப்படியான பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறித்து அவர் தெளிவாக கூறவில்லை.

நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தல்

ஆனால், நடிகர் சங்கத் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், ஸ்ரீரெட்டியின் இந்தப் பதிவுகள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஷாலின் பிரச்சார வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வரலட்சுமி சரத்குமார், ராதிகா சரத்குமார் போன்றோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவுகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X