‘ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து..’ ராகவா லாரன்ஸ் பற்றி திடுக் பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி

நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

Recommended Video

ராகவா லாரன்ஸ் பற்றி திடுக் பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி- வீடியோ

சென்னை: படவாய்ப்பு தருவதாகக் கூறி ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த சில நாட்களாக இவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறத் தொடங்கியுள்ளார்.

சென்னை ஹோட்டல் ஒன்றில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பிரபல இயக்குநர் முருகதாஸ் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் மீது குற்றம் சாட்டினார்.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது புதிய புகார் ஒன்றைத் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஹைதராபாத் ஹோட்டல்:

ஹைதராபாத் ஹோட்டல்:

ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்து சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன்.

உதவி:

உதவி:

ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.

ரொமான்டிக்:

ரொமான்டிக்:

ஆனால், போக போக அவரின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. என் உடலின் வயிற்றுப்பகுதி உட்பட சில பகுதிகளை காட்ட சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்ய சொன்னார்.

வாய்ப்பு தருவதாக உறுதி:

வாய்ப்பு தருவதாக உறுதி:

அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால், எதுவும் செய்யவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X