“கேமரா முன் போர்வைக்குள் செக்ஸ் வைத்து கொள்ள ஓகேவா?”.. பிக் பாஸ் மீது பிரபல நடிகை சர்ச்சை புகார்!
கேமரா முன்பே போர்வைக்குள் சக போட்டியாளருடன் உறவு வைத்துக் கொள்ளச் சம்மதமா என பிக் பாஸ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கேட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை: கேமரா முன்பே போர்வைக்குள் சக போட்டியாளருடன் உறவு வைத்துக் கொள்ளச் சம்மதமா என பிக் பாஸ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கேட்டதாக பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெண்களை படவாய்ப்பு தருவதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாகக் கூறி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பெயரையும் அவர் நேரடியாகவே வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். தனக்கு நீதி கேட்டு அவர் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினார்.
இவர் பிக் பாஸ் தமிழ் அல்லது தெலுங்கு சீசனில் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், தான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் ஸ்ரீரெட்டி. அதில் அவர் கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன.

கேமரா முன் செக்ஸ்
"பிக்பாஸ் வாய்ப்பு பற்றி பேசவேண்டும் என கூறி ஹைதராபாத் கோல்கொண்டா ஹோட்டலுக்கு வரச்சொன்னார்கள். அங்கு போன பிறகு அபிஷேக் என்பவர் சில கேள்விகள் கேட்டார். 'நீங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒருவரை ஜோடியாக்கி கேமரா ஓடிக்கொண்டிருக்கும்போதே கட்டிலில் ப்ளாங்கெட் போட்டுகொண்டு செக்ஸ் வைத்துக்கொள்ள தயாரா?' என கேள்வி வந்ததால் அதிர்ச்சியானேன். முடியாது என கூறிவிட்டேன்.

குட்டையான உடை
அதன்பிறகு உங்களுக்கு குட்டையான உடைகள் அணிந்து கொள்ள தயாரா என கேட்டார். அதற்கு ஓகே என்றேன். அதன்பிறகு என்னுடைய உடல் பாகங்கள் சைஸ் பற்றி அவர் கேட்ட சில கேள்விகள் தான் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

கிளம்பிவிட்டேன்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமா என யோசிக்கிறேன்" என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நல்லவேளை நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போக தேர்வாகவில்லை. பிக்பாஸ் சென்று வந்தால் யார் கேரியரில் ஜெயித்திருக்கிறார்கள்" எனக் கேட்டுள்ளார் அவர்.

தொடரும் புகார்கள்
ஸ்ரீரெட்டி இவ்வாறு பரபரப்பு புகார் தெரிவித்திருப்பது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றித்தான். ஆனால், இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக அதற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் அளித்து வரும் பேட்டிகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











