'ஆத்தாடி, இந்த இளம் ஹீரோவையும் விட்டு வைக்கலையே..' நடிகை ஶ்ரீரெட்டியின் அடுத்த அட்டாக்கை பாருங்க!
சென்னை: நடிகை ஶ்ரீரெட்டி, அந்த இளம் ஹீரோவையும் விட்டுவைக்காமல் அட்டாக் செய்துள்ளார்.
சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி, சீரழித்ததாக சில நடிகர்களின் பெயர்களையும் அவர்களோடு இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.

விஷால், லாரன்ஸ்
தெலுங்கு சினிமாவின் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டக்குபதி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சொன்னார்.

சிரஞ்சீவி
பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவியையும் அவரது குடும்பத்தினரையும் பற்றி அதிரடியாக புகார் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஶ்ரீரெட்டி, சமீபத்தில் பவன் கல்யாணை பற்றி மீண்டும் பரபரப்பு புகார் கூறியிருந்தார். பல இளம்பெண்களின் வாழ்க்கையை சூறையாடி யுள்ளதாக அவர் கூறியிருந்தார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி பற்றியும் அவர் புகார் கூறி இருந்தார்.

கராத்தே கல்யாணி
இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி, தன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக ஶ்ரீரெட்டி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். அவர் மீது சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஶ்ரீரெட்டி புகார் கொடுத்திருந்தார். இது பரபரப்பானது.

விஜய் தேவரகொண்டா
இந்நிலையில் அடுத்த அட்டாக்கை ஆரம்பித்திருக்கிறார். இளம் ஹீரோவான விஜய் தேவரகொண்டா பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கமென்ட் அடித்துள்ளார் ஶ்ரீரெட்டி. அதில், விஜய் தேவரகொண்டா, உங்களை நாங்கள் அதிகம் விரும்புகிறோம். நீங்கள் ரன்வீர் சிங்கை காப்பி அடிக்கத் தேவையில்லை. எங்களுக்கு ஜெராக்ஸ் வேண்டாம், அசல்தான் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











