'தல காலில் என் தலை'... அஜித் பற்றி ஸ்ரீ ரெட்டி போட்ட பரபரப்பு பேஸ்புக் போஸ்ட்!

நடிகர் அஜித் மீது தனக்கு ஒரு தலை காதல் இருப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர் அஜித் குறித்து தனது பேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, பல்வேறு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியவர். தனது முகநூல் பக்கத்தில் தான் அவர் தனது புகார்களை பதிவிடுவார்.

இவர் தற்போது சென்னையில் குடியேறி தமிழ் படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனக்கு தோன்றும் விஷயங்களை, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

செல்பி போட்டோ

செல்பி போட்டோ

சில சமயம் தனக்கு தானே செல்பி வீடியோ மற்றும் போட்டோ எடுத்து அதையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவார். அப்படி அவர் வெளியிடும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், மிக ஆபாசமாகவும் இருப்பதுண்டு.

அஜித் மீது காதல்

அஜித் மீது காதல்

இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் அஜித் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நடிகர் அஜித்தை புகழ்ந்து இருப்பதோடு, அவரை ஒருதலையாக காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.

சர்ச்சைகளில் இருந்து விலகி...

சர்ச்சைகளில் இருந்து விலகி...

அவர் தனது பேஸ்புக் பதிவில், "அஜித்தின் படத்தை பார்க்காமல் நான் உறங்க செல்ல மாட்டேன். அவர் தமிழ்நாட்டில் நம்பர் 1 ஹீரோ. சர்ச்சைகளில் இருந்து அவர் விலகியே இருப்பார். மிகவும் தன்மையாக பேசக்கூடியவர்.

தல காலில் என் தலை

தல காலில் என் தலை

குடும்பத்தை மதிக்கும் மனிதர் அஜித். தனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறார். மிகச் சிறந்த மனிதர். சிறந்த கணவர், சிறந்த தந்தை. கோடிக்கணக்கான பெண்களின் இதயங்களை திருடியவர். என் தலை உங்கள் காலில் தல", என அவர் அஜித்தை பற்றி புகழ்ந்துள்ளார்.

ஆச்சர்யமான பதிவு

ஆச்சர்யமான பதிவு

வழக்கமாக தனது பதிவுகளில் ஹீரோக்களை திட்டி தான் ஸ்ரீ ரெட்டி பதிவிடுவார். ஆனால் முதல் முறையாக ஒரு ஹீரோவை அவர் புகழ்ந்து பேசியிருக்கிறார். இந்த பதிவை அஜித் ரசிகர்கள் பாராட்டியுள்ளார். ஆனால் விஜய் ரசிகர்கள் இதனை அவ்வளமாக ரசிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X