விடமாட்டார் போலிருக்கே... அந்த நடிகைக்காகவே பிரபல ஹீரோ விழாவுக்கு வந்தார்... ஶ்ரீரெட்டி பரபரப்பு
சென்னை: பிரபல ஹீரோவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார், சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி.
சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில தெலுங்கு நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார், ஶ்ரீரெட்டி.

தமிழ் சினிமாவிலும்
தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்தார்.

தெலுங்கு ஹீரோ
பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவியையும் அவரது குடும்பத்தினரையும் பற்றி அதிரடியாக புகார் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஶ்ரீரெட்டி, சமீபத்தில் பவன் கல்யாணை பற்றி மீண்டும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

சிரஞ்சீவி
பல இளம்பெண்களின் வாழ்க்கையை சூறையாடியுள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சிரஞ்சீவி பற்றி மீண்டும் புகார் கூறியுள்ளார். மகேஷ்பாபு ஹீரோவாக நடித்துள்ள படம், சரிலேரு நீக்கேவாரு.

விஜயசாந்தி
இதில், 13 வருடத்துக்குப் பிறகு விஜயசாந்தி நடித்துள்ளார். இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. அதில் சிரஞ்சீவி கலந்துகொண்டு பேசினார்.

ஏன் வந்தார்?
இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள ஶ்ரீரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன் பட விழாவுக்கு போகாமல், மகேஷ்பாபு பட விழாவுக்கு நடிகர் சிரஞ்சீவி ஏன் வந்தார்? அவருக்கும் மகேஷ் பாபுவுக்கும் என்ன சம்மந்தம்? காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் நடிகை விஜயசாந்திக்காவே மகேஷ்பாபு படத்தின் விழாவுக்கு வந்தார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகார், தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











