“உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா..?” வாரிசு நடிகையின் லிப் லாக் சீன் பற்றி ஸ்ரீரெட்டி ஆவேசம்!
தொரசானி படத்தில் ஷிவாத்மிகா லிப் லாக் காட்சியில் நடித்துள்ளது பற்றி ஸ்ரீரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தன்னை குறைக்கூறிய ஜீவிதா, தனது மகளை லிப்லாப் காட்சிகளில் நடிக்க வைத்தது ஏன் என நடிகை ஸ்ரீ ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள படம் தொரசானி. இந்த படத்தில் பிரபல நட்சத்திர ஜோடி டாக்டர் ராஜசேகர் - நடிகை ஜீவிதாவின் மகள் ஷிவாத்மிகா நாயகியாக நடித்துள்ளார்.
கடந்த வாரம் தொரசானி படம் ரிலீசானது. இதில் லிப் லாக் முத்தக்காட்சி இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீவிதாவுடன் பிரச்சினை:
இந்நிலையில் இதனை ஜீவிதாவுக்கு எதிரான பிரச்சினையாக தனது கையில் எடுத்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவருக்கும் ஜீவிதாவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது. முன்பு ஸ்ரீ ரெட்டியின் பேச்சு மற்றும் நிர்வாணப் போராட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தார் ஜீவிதா.

கேள்வி:
தற்போது இதுதான் சாக்கு என, தன்னை குறைக்கூறிய ஜீவிதாவை கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக பேஸ்புக்கிலும் லைவ் செய்து ரசிகர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். அப்போது, ‘தனது மகளை லிப்லாக் காட்சிகளில் நடிக்க வைத்தது ஏன்?' என ஸ்ரீ ரெட்டி ஜீவிதாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேஸ்புக் லைவ்:
இதுகுறித்து பேஸ்புக்கில் லைவ் சேட்டிங்கில் அவர், "படத்தில் வரும் லிப்லாக் காட்சி, அந்த சூழலுக்கு ஏற்புடையதாகத் தான் இருக்கிறது. ஆனால் லிப்லாக் முத்தம், செக்ஸ் காட்சிகள் எல்லாம் கூடாது எனக் கூறிய ஜீவிதா தனது மகளை எப்படி அப்படி நடிக்க அனுமதித்தார்?", எனக் கேட்டுள்ளார்.

முத்தக் கலாச்சாரம்:
ஸ்ரீ ரெட்டியில் இந்த பேஸ்புக் பதிவு டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு பேட்டியொன்றில் ஜீவிதா, ‘அர்ஜுன் ரெட்டி போன்ற படங்கள் கிஸ் கலாச்சாரத்தை வளர்ப்பதாக' கூறினார். குடும்பத்தினருடன் எப்படி தியேட்டரில் படம் பார்பார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினர். தற்போது அவரது மகளே அத்தகைய காட்சியில் நடித்துள்ளார். ஜீவிதா இதற்கு பதில் தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











