"என்னை பப்ளிக் டாய்லெட் மாதிரி பயன்படுத்தினார்".. தமிழ் நடிகர் மீது ஸ்ரீரெட்டி புதிய புகார்!

தமிழ் நடிகர் ஒருவர் மீது மீண்டும் பாலியல் புகார் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

Recommended Video

பப்ளிக் டாய்லெட் மாதிரி என்னை ஒரு தமிழ் ஹீரோ : ஸ்ரீ ரெட்டி வைரல் பேட்டி- வீடியோ

சென்னை: தமிழ் நடிகர் ஒருவர் தன்னை பொதுக் கழிப்பறை மாதிரி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விட்டதாக பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது சென்னையில் வசித்து வரும் அவர், சில தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தன் மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் தனது படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்துள்ளார். இதனால் இதுவரை அவர் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது அவரை பாராட்டி வருகிறார்.

மீண்டும் புகார்:

ராகவா லாரன்ஸ் மட்டுமின்றி, முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்.சி என மேலும் சிலர் மீதும் அவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் சில காலம் அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் ஒரு நடிகர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

பொதுக்கழிப்பிடம் மாதிரி:

பொதுக்கழிப்பிடம் மாதிரி:

அப்பதிவில் அவர், "என்னை பொதுக்கழிப்பிடம் போல் பயன்படுத்தினார். அந்த வலியும் காயமும் இன்னமும் ஆறவில்லை. மனரீதியாக கடுமையான பாதிப்புக்கு ஆளானேன். எனக்குத் தெரியும், அது என்னுடைய சம்மதத்துடன் தான் நடந்தது என. ஆனால் படவாய்ப்புக்காக நான் ஒரு பிணத்தைப் போலத்தான் நடந்து கொண்டேன்.

கடுமையான பாதிப்பு:

கடுமையான பாதிப்பு:

எதையுமே நான் முழுமனதுடன் ஈடுபாட்டுடன் செய்யவில்லை. என்னை நம்புங்கள். அவை எல்லாமே என் வாழ்க்கையின் மிக பயங்கரமான தருணங்கள். வெளிப்படையாக பேசுவது என் வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இதில் இருந்து நான் எப்படி மீண்டு வருவேன்.

கேள்வி:

கேள்வி:

இப்போது ஒரு தமிழ் ஹீரோ எனது திரை வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார். அவர் தெலுங்கு திரையுலகினருக்கு மிகுந்த நெருக்கமானவர். அவர் ஒரு மிகப்பெரிய பெண் பித்தர். இந்த பூமியில் வாழ நான் தகுதியற்றவளா என்ன?" என இவ்வாறு கேள்வியுடன் அப்பதிவை அவர் முடித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: tamil hero
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X