ஜானி சின்ஸ் பயோபிக்கில் பவன் கல்யாண் நடிக்கணுமா?.. ஸ்ரீரெட்டி போட்ட போடு.. சும்மா பத்தி எரியுது!
ஹைதராபாத்: டோலிவுட் நடிகர் பவன் கல்யாண் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி போட்ட ட்வீட் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் பற்றி ஏற்கனவே பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் நடிகை ஸ்ரீரெட்டி. பவன் கல்யாண் மட்டுமின்றி டோலிவுட்டில் பல நடிகர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் படுக்கையை பகிர்ந்து கொண்டு பட வாய்ப்புகளை தராமல் ஏமாற்றியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பாலியல் புகார்: மேலும் ஒரு கட்டத்தில் நடுரோட்டில் இறங்கி அரை நிர்வாண போராட்டத்தையே நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் தற்போது பவன் கல்யாண் பற்றி மோசமான பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில் பவன் கல்யாண் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர்களை மட்டுமின்றி தமிழிலும் நடிகர் விஷால், லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் ஸ்ரீரெட்டி. வேண்டுமென்றே அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என இவர் மீது நடிகர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.
ஜானி சின்ஸ் படத்தில் பவன் கல்யாண் ட்ரோல்: சமீபத்தில் பவன் கல்யாண் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவர் நடித்த ஓஜி படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியானது. அந்தக் காட்சியை ட்ரோல் செய்த நடிகை ஸ்ரீரெட்டி. பவன் கல்யாண் பற்றிய அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருவதாக பவன் கல்யாண் ரசிகர்கள் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர்.
திட்டும் ரசிகர்கள்: ஹோம்பலே ஃபிலிம்ஸ் ஜானி சின்ஸ் பயோபிக்கை தயாரிக்கப் போவதாகவும் அதில், நடிகை சன்னி லியோன் உடன் பவன் கல்யாண் நடிக்கப் போகிறார் என நெட்டிசன் ஒருவர் ஷேர் செய்த போஸ்ட்டுக்கு அவருடைய சொந்த வாழ்க்கையில் இருந்தே சீன்களை எடுத்து வைத்துக் கொள்ளலாம் என பங்கம் பண்ணியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
ஸ்ரீரெட்டியின் இந்த போஸ்ட்டை பார்த்து கடுப்பான பவன் கல்யாண் ரசிகர்கள் நீ போய் மியா கலிஃபா பயோபிக்ல முதல்ல நடி கரெக்ட்டா இருக்கும் என கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











