பல லீலை வீடியோக்களை வெளியிடுகிறேன், ரெடியாகுங்க: ஜீவிதாவை எச்சரித்த ஸ்ரீ ரெட்டி
Recommended Video

ஹைதராபாத்: பல லீக்ஸுகளுக்கு தயாராக இருக்குமாறு நடிகை ஜீவிதாவை எச்சரித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
ஸ்ரீ ரெட்டியை ஏமாற்றி படுக்கைக்கு அழைத்துச் செல்ல அவர் ஒன்றும் குழந்தை இல்லை என்றார் நடிகை ஜீவிதா ராஜசேகர். மேலும் ஸ்ரீ ரெட்டியின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் ஸ்ரீ ரெட்டி தான் எப்பொழுதும் செக்ஸி மூடில் இருப்பதாக கூறினார்.

லீக்ஸ்
ஜீவிதா ராஜசேகருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. மேலும் பல லீக்ஸுகளுக்கு(ஸ்ரீ லீக்ஸ்) தயாராக இருக்குமாறு ஜீவிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ஹீரோயின்
பாகுபலி பட ஹீரோயினின் லீக்ஸ் படம் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. அது போலி என்று சம்பந்தப்பட்ட நடிகையின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ
தெலுங்கு திரையுலகில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கமே இல்லை என்று கூறும் இளம் நடிகை ஒருவரின் வீடியோவை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

பதிலடி
தன்னை அசிங்கமாக திட்டும் நடிகர் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப் போவதாக வேறு கூறியுள்ளார் அவர்.


Click it and Unblock the Notifications











