இது என்ன ஆச்சரியம்.? அமைதியான வாழ்க்கை.. நடிகர் ராணாவை திடீரென்று வாழ்த்திய பிரபல சர்ச்சை நடிகை!

By

சென்னை: காதலியை அறிவித்த நடிகர் ராணாவை பிரபல சர்ச்சை நடிகை திடீரென்று வாழ்த்தி இருப்பது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended Video

Wow: Rana Daggubati confirms his relationship | Miheeka Bajaj

தமிழில், அஜித்தின் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் ராணா, பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இந்தி படங்களிலும் நடித்து வரும் இவர், இப்போது பிரபு சாலமன் இயக்கும் காடன் படத்தில் நடித்துள்ளார்.

கின்னஸில் இடம்

கின்னஸில் இடம்

இந்த படம் இந்தி தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ளது. ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டிய இந்தப் படம் லாக்டவுன் காரணமாகத் தள்ளி போயிருக்கிறது. இதையடுத்து சில தெலுங்கு படங்களில் நடித்து வரும் ராணா, பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவரது தாத்தா ராமநாயுடு, தனது சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மூலம், 150 படங்களுக்கு மேல் தயாரித்து கின்னஸில் இடம்பிடித்தவர்.

மிஹீகா பஜாஜ்

மிஹீகா பஜாஜ்

இவரது தந்தை சுரேஷ்பாபு பிரபல தயாரிப்பாளர். சித்தப்பா, பிரபல தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ். நாகார்ஜுனா உட்பட சில திரைபிரபலங்கள் இவரது உறவினர்கள். நடிகர் ராணா, மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வருகிறார். தனது காதலை அவர் ஏற்றுக் கொண்டதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார், ராணா. அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

சர்ச்சை நடிகை

சர்ச்சை நடிகை

இதையடுத்து ராணாவுக்கு பல நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணத்தை டிசம்பர் மாதத்துக்குள் நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பிரபல சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி, நடிகர் ராணாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 'ராணா, உங்கள் காதலியுடன் அமைதியான வாழ்க்கை வாழ கடவுள் ஆசிர்வதிப்பார்' என்று தெரிவித்துள்ளார்.

தம்பி மீது புகார்

தம்பி மீது புகார்

நடிகை ஶ்ரீரெட்டி, ராணாவின் தம்பி அபிராம் மீது ஏற்கனவே பாலியல் புகார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தையும் வெளியிட்டு ஏமாற்றி விட்டதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று நடிகர் ராணாவை இப்படி வாழ்த்தி இருப்பது டோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X