இது நம்ம ஆளு படத்தை கைப்பற்றிய தேனாண்டாள் பிலிம்ஸ்... காதலர் தினத்திற்கு வெளியாகுமா?
சென்னை: சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இது நம்ம ஆளு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
சிம்பு, நயன்தாரா, சூரி, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இதுவரை வெளியாகாமாலே இருக்கிறது.

காதல் முறிவிற்குப் பின்னர் சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அபரிமிதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
முன்னதாக வருகின்ற காதலர் தினத்தில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பீப் பாடல் பிரச்சினையில் சிம்பு சிக்கிக்கொண்டதால் இப்படம் வெளியாவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ஒரு பெரிய தொகையை கொடுத்து இது நம்ம ஆளு படத்தை இந்நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறுகின்றனர்.
பொங்கல் தினத்தில் இந்நிறுவனம் வாங்கி வெளியிட்ட கதகளி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பே பேய்ப்படங்கள் என்பதால் கதகளியைத் தொடர்ந்து அரண்மனை 2 படத்தையும் இந்நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இது நம்ம ஆளு படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருந்தாலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை இந்நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sri Thenandal Films Capturing Simbu, Nayanthara's Idhu Namma Aalu Tamilnadu Theatrical Rights. This movie may be Released on February 12th for Worldwide.
60 words
சிம்பு, நயன்தாரா, சூரி, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.காதல் முறிவிற்குப் பின்னர் சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அபரிமிதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











