20 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவி நடிக்கும் தமிழ்ப் படம்... விஜய்யுடன் நடனம் ஆடினார்!
தமிழ் சினிமாவின் முன்னாள் கனவுக் கன்னியான ஸ்ரீதேவி 20 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி தமிழ்ப் பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்தார்.
தனது முதல் காட்சியில் முன்னணி நாயகன் விஜய்யுடன் நடனம் ஆடினார்.

ரஜினி - கமல் ஜோடி
தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. அதன் பிறகு இந்திக்கு போய் மும்பையில் பெரிய நடிகையாக வலம் வந்தார். அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

20 ஆண்டுகள்
ஸ்ரீதேவி தமிழ் படங்களில் நடித்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்க்கு ஜோடி
இதில் விஜய்க்கு இரு வேடங்கள். ஒன்று வயதான வேடம். அந்த வேடத்தில் விஜய்யின் ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறார்.

நடனம்
இந்த படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீதேவி சென்னை வந்தார். காலை கிழக்கு கடற்கரை சாலை ஆதித்ராம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு சென்றார். அங்கு ஸ்ரீதேவியின் நடன காட்சியொன்றை சிம்புதேவன் படமாக்கினார்.

விஜய்யுடன்
இதில் ஸ்ரீதேவியுடன் விஜய், ஹன்சிகா, சுதீப் போன்றோரும் இணைந்து ஆடினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட நடன கலைஞர்களும் இதில் பங்கேற்றனர்.

பிரமாண்ட அரங்கம்
இந்த பாடல் காட்சிக்காக பிரமாண்ட அரங்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி சென்னையில் தங்கி இந்த படத்தில் நடிக்கிறார். வேறு ஒரு தமிழ்ப் படத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார்.

ஸ்ருதிஹாஸன்
இந்தப் படத்தில் ஹன்சிகா தவிர ஸ்ருதிஹாசனும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











