அம்மாவுக்காக இக்கட்டான சூழலிலும் பிரபல இயக்குனரின் படத்தில் நடித்த ஸ்ரீதேவி
Recommended Video

திருவனந்தபுரம்: தன் அம்மா கொடுத்த வாக்கிற்காக ஒரு படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி.
பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் ஆன ஸ்ரீதேவி துபாய் சென்றபோது உயிர் இழந்தார். அவருக்கு மாநில அரசு மரியாதையுடன் நேற்று இறுதிச்சடங்கு நடந்தது.
இந்நிலையில் ஸ்ரீதேவி பற்றி பிரபல மலையாள நடிகை கேபிஏசி லலிதா கூறியதாவது,

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி முதன்முதலாக கேமராவை பார்த்தது என் கணவர் பரதனுக்காக தான். ஸ்ரீதேவிக்கு மூன்றரை வயது இருந்தபோது சோப்பு விளம்பரத்திற்காக அவரை புகைப்படம் எடுத்தார் என் கணவர்.

நடிகை
பல வருடங்கள் கழித்து என் கணவர் தேவராகம் படம் எடுக்க நினைத்தபோது ஸ்ரீதேவியை நடிக்க வைக்க விரும்பினார். ஸ்ரீதேவியை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றார். ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி என் கணவரை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார்.

படம்
என் மகளை முதன்முதலாக புகைப்படம் எடுத்தது நீங்கள் தானே என்று ஸ்ரீதேவியின் அம்மா பரதன் சேட்டனிடம் தெரிவித்திருக்கிறார். நீங்கள் தான் என் மகளை முதலில் புகைப்படம் எடுத்தீர்கள் அவள் என்ன பிசியாக இருந்தாலும் உங்கள் படத்தில் நடிப்பாள் என்று ராஜேஸ்வரி வாக்கு கொடுத்தார்.

சம்பளம்
பரதன் சேட்டனிடம் ராஜேஸ்வரி வாக்கு கொடுத்தபோது ஸ்ரீதேவி உச்சத்தில் இருந்தார். அவர் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். மலையாளத்தை விடுங்க தமிழ் படங்களில் கூட நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி தாயின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தேவராகம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

சிகிச்சை
தேவராகம் படப்பிடிப்பில் ஸ்ரீதேவி கலந்து கொண்டபோது அவரின் தாய்க்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்ரீதேவி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா சென்றார்.

அந்த படம்
மருத்துவமனையில் கண்விழித்தபோது ராஜேஸ்வரி பரதன் சேட்டனின் படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனால் ஸ்ரீதேவி அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தன் தாய் வேறு ஒரு நாட்டில் உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது வேறு யாரும் நடித்துக் கொடுத்திருக்க மாட்டார்கள். தாயை அவ்வளவு மதித்தார் அவர் என்றார் லலிதா.


Click it and Unblock the Notifications











