என்னம்மா கொஞ்சுறாங்க.. புது ஸ்டுடியோவில் அக்கா ப்ரீத்தாவுடன் ஸ்ரீதேவி.. சூப்பர் சிஸ்டர்ஸ்!

சென்னை: இயக்குநர் ஹரி சென்னையில் மூன்றாவது ஸ்டூடியோவை உருவாக்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புதிதாக திறக்கப்பட்ட அந்த குட் லக் ஸ்டூடியோவை நடிகர் சூர்யா முன் நின்று திறந்து வைத்தார்.

தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஹரி. ஐயா, சிங்கம், சாமி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஹரி. சூர்யாவுடன் இணைந்து அருவா படத்தை இயக்கப் போவதாக அறிவித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் சூர்யா திடீரென விலகிவிட்டார்.

Sridevi and Preetha Hari latest video at new studio grabs fans attention

அதன் பின்னர் இருவருக்கும் இடையே சண்டை என வதந்திகள் பரவின. ஆனால் திடீரென ஹரியின் மூன்றாவது ஸ்டுடியோ திறப்பு விழாவுக்கு சூர்யா வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஸ்டூடியோ திறப்பு விழாவில் அக்கா பிரீத்தா உடன் தங்கை ஸ்ரீதேவி எடுத்துக் கொண்ட வீடியோவை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

விஜயகுமார் மகள்கள்: வனிதா விஜயகுமார், பிரீத்தா மற்றும் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிகர் விஜயகுமாரின் மகள்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்களின் சகோதரர் தான் அருண் விஜய். பொண்ணு வீட்டுக்காரன், காக்கை சிறகினிலே, புன்னகை தேசம், சந்திப்போமா மற்றும் படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை பிரீத்தா விஜயகுமார் இயக்குநர் ஹரியை திருமணம் செய்து கொண்ட பின்னர் குடும்பத்தை கவனித்து வருகிறார். வனிதா விஜயகுமார் மற்றும் பிரீத்தா விஜயகுமாரை தொடர்ந்து சினிமாவில் ஸ்ரீதேவியும் தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

Sridevi and Preetha Hari latest video at new studio grabs fans attention

விஜய் டிவியில் ஸ்ரீதேவி: சினிமாவில் இருந்து நடிகை ஸ்ரீதேவியும் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் விதமாக விலகிவிட்டார். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது விஜய் டிவியில் ஜோடி ஆர் யூ ரெடி எனும் நடன நிகழ்ச்சிக்கு மீனாவுடன் சேர்ந்து நடுவராக செயல்பட்டு வருகிறார்.

அக்காவுடன் ஸ்ரீதேவி: நடிகை ஸ்ரீதேவி புதிதாக திறக்கப்பட்டுள்ள தனது அக்காவின் கணவர் ஹரியின் ஸ்டுடியோவுக்கு அந்த நிலையில் அக்காவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இருவரும் என்னம்மா கொஞ்சிக்கிறாங்க என்றும் இந்த வயதிலும் அழகுடன் சும்மா தகதகன்னு ஜொலிக்கிறார்கள் என ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Sridevi and Preetha Hari latest video at new studio grabs fans attention

விஷால் படம்: இயக்குநர் ஹரி கடைசியாக இயக்கிய யானை திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் ரத்தினம் படத்தை இந்த மாதம் வெளியிட காத்திருக்கிறார். அதற்காக பிரத்யேக வாகனம் ஒன்றை தமிழ்நாடு முழுவதும் அனுப்பி புரமோஷன் செய்து வருகிறார். எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் பப்ளிசிட்டி ரொம்பவே முக்கியம் என்றும் அரசியல் தலைவர்களே தேர்தலுக்கு முன்பாக ஏன் மக்களை ஊர் ஊராக சென்று சந்திக்கின்றனர் எல்லாம் பப்ளிசிட்டிக்காகத் தான் என்று பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X