ஒரு விஜய்க்கு ஸ்ரீதேவி ஜோடி... இன்னொரு விஜய்க்கு ஸ்ருதிஹாஸன்!
கத்தி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதுப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் பழைய நடிகை ஸ்ரீதேவியும் ஸ்ருதிஹாஸனும்.
சிம்பு தேவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன், ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.

போனி கபூர்
தற்போது இந்த தகவலை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "விஜய் படத்தில் ஸ்ரீதேவி நடிப்பது உண்மைதான். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும்" என்கிறார் போனி கபூர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில்
ஸ்ரீதேவி கடைசியாக தமிழில் ரஜினியுடன் நான் அடிமை இல்லை படத்தில் நடித்தார். 1986-ல் இப்படம் வந்தது. அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து இருமொழிப் படம் ஒன்றில் நடித்தார். பெயர் தேவராகம். தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்து வந்த ஸ்ரீதேவி தற்போது விஜய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சரித்திரப் பின்னணி
இதன்மூலம் அவர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார். அருந்ததி, மகதீரா தெலுங்கு படங்களை போல் சரித்திர காலத்தையும் இந்த காலத்தையும் கலந்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்.

விஜய்க்கு ஜோடி
இதில் ஸ்ரீதேவி அரசி வேடத்தில் அதாவது விஜய்க்கு ஜோடியாக வருகிறாராம். இன்னொரு விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாஸன் நடிக்கிறார். இந்த படம் விஜய்க்கு 58 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











