கையில் வைர மோதிரம்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் ரகசிய நிச்சயதார்த்தம்? காதலன் யார்?

மும்பை: ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலனை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக காட்டுத்தீ போல செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்த ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.

sridevi daughter janhvi kapoor secret engagement rumours

தமிழில் ஜான்வி கபூர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெலுங்கில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக NTR30 படமான தேவரா படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவி மகள்: அம்மா போலவே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியான தடக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் நடிகர் அகில் அக்கினேனி நடிக்கும் தீரா என்ற படத்தில் ஜான்வி கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருப்பதி கோவில்: படங்களில் பிஸியாக நடித்த வரும் ஜான்வி கபூர், திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோயிலுக்கு பாரம்பரிய உடையான பாவாடை தாவணியில் நேற்று முன் தினம் வந்திருந்தார். அவருடன் அவரது காதலர் ஷிகர் பஹாரியானும் வந்திருந்தார். இருவரும் ஜோடியாக ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

sridevi daughter janhvi kapoor secret engagement rumours

ரகசிய நிச்சயதார்த்தம்: இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில், ஜான்வி கபூர் கையில் அணிந்து இருக்கும் வைர மோதிரத்தைப் பார்த்த ரசிகர்கள், ஜான்வி கபூர் தனது காதலன் ஷிகர் பஹாரியாவை ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், அதற்காக வழிபாடு செய்யவே திருப்பதி வந்ததாகவும், பலவிதமான செய்திகள் ஜான்வி கபூர் பற்றி இணையத்தில் பரவி வருகிறது.

காதலனுடன்: ஆனால் இவை அனைத்தும் வதந்திகள் என்றும், ஜான்வி கபூர் 6 மாதத்திற்கு ஒரு முறை திருப்பதி வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அதுபோலத்தான் இப்போதும் வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் திருப்பதி வந்த போதும் தனது காதலனுடன் தான் வந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X