இதாங்க ஸ்ரீதேவி மகள் அறிமுகமாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
Recommended Video

சாய்ரட்... மராத்தியில் வெளியான, ஆணவக் கொலைகளுக்கு எதிரான இந்தப் படத்தை யாராலும் மறக்க முடியாது.
இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக்காகியுள்ளது. தடக் என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி. அவருடன் இஷான் கட்டர் (ஷாஹித் கபூரின் தம்பி) நடிக்கிறார்.

தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படத்தை ஷசாங்க் கைதான் இயக்கியுள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகின. ஸ்ரீதேவியை விட ரொம்பவே க்யூட்டாக இருக்கிறார் ஜான்வி என்றும், ஜான்விக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேபோல, நாயகனாக அறிமுகமாகும் இஷான் கட்டர்தான் பாலிவுட்டின் அடுத்த சாக்லேட் பாய் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் ஜூலை 6, 2018-ல் வெளியாகவிருக்கிறது.

சாய்ரட் படம் மராத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் தெலுங்கிலும் இந்தப் படத்தைத் தயாரிக்கவிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











