ஶ்ரீதேவி ஒயின் மட்டுமே குடிப்பார் - குடும்ப நண்பர் அமர் சிங்
Recommended Video

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் மாரடைப்பால் இறந்தார் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று வந்த மருத்துவ அறிக்கையில் குடித்ததால் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி பல செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அவர் ஒயின் சில நேரங்களில் அருந்துவாரே தவிர பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய மதுவை அருந்தமாட்டார் என்று முன்னாள் எம்.பியும், ஶ்ரீதேவியின் குடும்ப நண்பருமான அமர்சிங் கூறியுள்ளார்.
ஶ்ரீதேவி இறந்த அன்று மது அருந்தினாரா என்பது தொடர்பாகவும், ஶ்ரீதேவி குடும்பத்தாரிடம் துபாய் வழக்கறிஞர் குழு விசாரணை நடத்தி வருகிறதாம்.

ஶ்ரீதேவி
திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவரஸ் ஓட்டலில் உள்ள பாத்ரூமில் மயங்கி விழுந்தால் அவரது உயிர் பிரிந்ததாக தெரியவந்துள்ளது. அப்போது அவர் மது அருந்தியிருந்ததாக. துபாயிலிருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு
துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் உறவினர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவிக்கு சனிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

பாத்டப்பில் தவறி விழுந்து
இந்நிலையில் திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் உள்ள தனது அறையின் குளியலறையில் பாத்டப்பில் பயங்கி விழுந்தால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரத்தத்தில் ஆல்கஹால்
ஶ்ரீதேவியின் ரத்த மாதிரிகளில் ஆல்கஹால் கலந்திருந்ததாக மருத்துவ அறிக்கைகளில் தகவல்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணைகலும் நடைபெற்று வருகின்றன.
ஶ்ரீதேவி ஒயின் மட்டுமே குடிப்பார்
ஶ்ரீதேவி ஒயின் சில நேரங்களில் அருந்துவாரே தவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மதுவை அருந்தமாட்டார் என்று முன்னாள் எம்.பியும், ஶ்ரீதேவியின் குடும்ப நண்பருமான அமர்சிங் கூறியுள்ளார். இது ஶ்ரீதேவி மரணத்தில் இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











