ஸ்ரீதேவி மாதிரியே, அவங்க பொண்ணும் மைக்கேல் ஜாக்சனோட தீவிர ரசிகையாம்...
மும்பை: தானே வரைந்த மைக்கேல் ஜாக்சன் உருவப்படத்தை தனது மகள் ஜானவிக்கு பரிசளித்து மகிழ்ந்துள்ளார் ஸ்ரீதேவி.
ஸ்ரீஇதேவியின் மூத்த மகளான ஜானவிக்கு மைக்கேல் ஜாக்சன் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் தன் கையாலேயே வரைந்த மைக்கேல் ஜாக்சன் உருவப்படத்தை ஜானவிக்கு பரிசாகக் கொடுத்து அசத்தி விட்டாராம் ஸ்ரீதேவி.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜானவி, 'அம்மா எனக்கு கொடுத்ததிலேயே, இது தான் மிகவும் விலையுயர்ந்த பரிசு' என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார்.

அடிக்கடி பார்த்துக் கொள்ள வசதியாக...
அம்மாவின் இந்த அன்புப் பரிசை தனது படுக்கை அறையில் மாட்டி அழகு பார்க்கிறாராம் ஜானவி.

ஸ்ரீதேவியும் மைக்கேல்ஜாக்சன் ரசிகை தான்...
இதில் முக்கியமான மற்றுமொரு விஷயம் என்னவென்றால், ஸ்ரீதேவியும் மைக்கெல்ஜாக்சனின் தீவிர ரசிகை தான். ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும் ஒருமுறை கூட ஸ்ரீதேவியால் மைக்கேல் ஜாக்சனை நேரில் சந்திக்க முடியவில்லையாம்.

மிகவும் வருத்தப்பட்டாராம்...
மைக்கேல் ஜாக்சன் இறந்த போது மிகவும் மனமுடைந்து காணப்பட்டாராம் ஸ்ரீதேவி. அந்த பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவரவே நீண்ட நாட்கள் ஆனதாக ஸ்ரீதேவியின் நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகால ஆசை...
மைக்கேல்ஜாக்சனின் டான்ஸ்ஸை தன்னுடைய ஏதாவது ஒரு படத்தில் புகுத்தி விட வேண்டும் என்ற ஸ்ரீதேவியின் ஆசை ‘இங்கிலீஷ், விங்கிலீஷ்' படம் மூலம் நிறைவேறியதாம்.

நினைவு தினம்...
இரு தினங்களுக்கு முன்னர் தான் மைக்கேல் ஜாக்சனின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











