twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்ரீதேவிகேர்ள் உமன் சூப்பர்ஸ்டார்: மயிலாக வந்து மக்களின் மனங்களின் நிறைந்தவர்

    |

    சென்னை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56வது பிறந்தநாள் ஆகஸ்ட் 13ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலின் அட்டைப்படம் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவி கேர்ள் உமன் சூப்பர்ஸ்டார் வரலாற்றுப் புத்தகத்தின் அட்டைப் படத்தை நடிகை வித்யாபாலன் வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பின்பு கதாநாயகியாக இந்திய திரையுலகைக் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. 1969இல் துணைவன் என்ற தமிழ் படத்தில் முருகன் வேடத்தில் அறிமுகமானார்.

    Sridevi girl women superstar book cover photo released by Vidya Balan

    கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு. ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்.

    சுதந்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் - வாழ்த்துக்கள் சுதந்திர தினத்தில் பிறந்தநாள் கொண்டாடும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் - வாழ்த்துக்கள்

    ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். இதுவரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது 300 வது படம் மாம்(MOM).

    Sridevi girl women superstar book cover photo released by Vidya Balan

    1980களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்தி படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்றார். கலை துறையில் இவர் ஆற்றிய சேவைக்காக 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும் இந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. இவருக்கு குஷி மற்றும் ஜான்வி என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்குப் பிறகு இங்கிலீஷ் விங்கிலிஷ் படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

    கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் துபாயில் மரணமடைந்தார். கடந்த ஆண்டு தனது உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி , ஹோட்டல் அறையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

    ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை ஸ்ரீதேவி கேர்ள் உமன் சூப்பர்ஸ்டார் (Sridevi:Girl woman Superstar) என்னும் நூலாக சத்யார்த் நாயக் என்பவர் எழுதியுள்ளார். இந்நூலை பெங்குவின் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் புத்தகத்தை வெளியிட ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அனுமதி அளித்துள்ளார். இந்தியத் திரையுலகில் மிகப்பெரிய ஸ்டாராக உருவானது எப்படி என்பதை சம்பவங்களின் துணையுடன் விவரித்துள்ளார் சத்யார்த் நாயக்.

    ஸ்ரீதேவியின் 56வது பிறந்தநாள் ஆகஸ்ட் 13ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வாழ்க்கை வரலாற்று நூலின் அட்டைப் படத்தை நடிகை வித்யாபாலன் வெளியிட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீதேவி. அதில் ஒயிலாக காட்சி தருகிறார் மயில் ஸ்ரீதேவி.
    Sridevi: Girl woman Superstar என்ற இந்த நூல் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The late actress Sridevi's biography book cover photo released by Actress Vidya Balan. The book is expected to be released next October.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X