ஸ்ரீதேவி வாழ்க்கை பலர் நினைப்பது போன்று சந்தோஷமானது இல்லை: இயக்குனர் பகீர் தகவல்

By Siva

Recommended Video

ராம்கோபால் வர்மா உருக்கமான பதிவு- வீடியோ

ஹைதராபாத்: ஸ்ரீதேவி ஒரு கூண்டுக்கிளி போன்று சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்ததாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவர் உயிர் இழந்ததில் இயக்குனர் ராம் கோபால் வர்மா மிகுந்த கவலையில் உள்ளார்.

ஸ்ரீதேவி பற்றி அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

கவலை

கவலை

இங்கிலிஷ் விங்கிலிஷ் மகிழ்ச்சியை தவிர ஸ்ரீதேவி மிகவும் கவலையில் இருந்தார். எதிர்காலம் என்னவாகுமோ, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகங்கள் அவர் மனதில் காயம் ஏற்படுத்திவிட்டன. அதில் இருந்து அவர் நிம்மதியாகவே இல்லை.

நடிப்பு

நடிப்பு

கேமராவுக்கு முன்பு நடிக்கும்போது மட்டுமே ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கையை மறந்து கற்பனை உலகில் இருக்கலாம் என்பதால் அவர் கேமராவுக்கு முன்பு மகிழ்ச்சியாக இருந்தார்.

அருமை

அருமை

ஸ்ரீதேவியின் வாழ்க்கை அழகானது என்றே பலரும் நினைத்தனர் அழகு முகம், அற்புதமான திறமை, 2 அழகான மகள்களுடன் நல்ல குடும்பம், அவருக்கு என்ன குறை என்று பலரும் அவரை பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

தாய்

தாய்

ஸ்ரீதேவியின் தந்தை இறக்கும் வரை அவர் வானில் சிறகடித்து பறந்தார். அதன் பிறகு அவரின் தாயால் கூண்டுக்கிளியாகிவிட்டார். அந்த காலத்தில் நடிகர்களுக்கு கறுப்பு பணத்தில் தான் சம்பளம் கொடுத்தார்கள்.

பிரச்சனை

பிரச்சனை

கறுப்பு பணத்தில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதால் ரெய்டு பயத்தில் ஸ்ரீதேவியின் தந்தை அந்த பணத்தை தனது உறவினர்கள், நண்பர்களிடம் கொடுத்து வைத்தார். அவர் இறந்த பிறகு அவர்கள் ஸ்ரீதேவியை ஏமாற்றிவிட்டனர்.

நஷ்டம்

நஷ்டம்

ஸ்ரீதேவியின் தாய் சில தவறான முதலீடுகள் செய்து நஷ்டம் அடைந்தார். இதனால் ஸ்ரீதேவி கிட்டத்தட்ட பணம் இல்லாமல் இருந்தபோது தான் போனி கபூர் அவர் வாழ்க்கையில் வந்தார். போனியும் அப்போது பெரும் கடனில் இருந்தாலும் ஸ்ரீதேவி அழ தோள் கொடுத்தார் என்கிறார் ராம் கோபால் வர்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X