ரிசார்ட்டில் 'குளுகுளு' என புத்தாண்டு கொண்டாடிய ஸ்ரீதேவி
மும்பை: நடிகை ஸ்ரீதேவி கடற்கரையோரம் உள்ள ரிசார்ட் ஒன்றில் தனது குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மும்பையில் செட்டிலாகி பல காலமாகிவிட்டது. கல்யாணம், குழந்தைகள் என்றான பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த அவர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மறுபடியும் நடிக்க வந்தார்.
படமும் ஹிட்டாகி அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

புத்தாண்டு
ஸ்ரீதேவி தனது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷியுடன் புத்தாண்டை கடற்கரையோரம் உள்ள ரிசார்ட் ஒன்றில் மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்.

இந்த வயதிலும்
50 வயதானபோதும் ஸ்ரீதேவி இன்னும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அதனால் அவர் அவரது மகள்களை போன்றே குட்டி குட்டியாக ஆடை அணிகிறார்.

நீச்சல் உடையில்
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தை ஸ்ரீதேவி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவரும், அவரது மகள்களும் நீச்சல் உடையில் உள்ளனர்.

கண்டனம்
ஸ்ரீதேவி வயதாகியும் குறைவான ஆடை அணிவதன் மூலம் பலரின் கண்டனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











