மயிலு மகள் அறிமுகம் இப்போதைக்கு இல்லையாம்...

மும்பை: சமீபகாலமாக தனது மகள் ஜான்வியுடன் தான் நிகழ்ச்சிகள் பங்கேற்று வருகிறார். இதனால் விரைவில் ஜான்வியின் திரைப் பிரவேசம் நிகழலாம் என்ற கருத்து பரவலாக நிலவியது.

பெரும்பாலான பிரபலங்கள் குறிப்பிட்ட காலம் வரை தங்களது பிள்ளைகளின் மேல் பிரபலம் என்ற ஊடக வெளிச்சம் விழாதவாறு பார்த்துக் கொள்கின்றனர். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் வாரிசுகளாகவே திரையுலகில் பிரவேசம் செய்கின்றனர்.

ரஜினி மற்றும் கமலின் மகள்கள், கார்த்திக் மகன் என இதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அந்தவகையில் தனது மகளோடு பொது நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த நடிகை ஸ்ரீதேவி பலரது கவனத்துக்கும் உள்ளானார்.

சாயலில் ஸ்ரீதேவியை நினைவு படுத்துவது போலவே உருவ அமைப்பைப் பெற்றுள்ளார் அவரது மகள் ஜான்வி. எனவே, அவரும் தனது தாயைப் போலவே குறைந்த வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விடுவார் என எதிர்பார்க்கப் பட்டது.

அமீரின் ரசிகையாம் ஜான்வி....

அமீரின் ரசிகையாம் ஜான்வி....

அதற்குத் தகுந்தாற்போல், அவர்களது வீட்டில் நடந்த படப்பிடிப்புகளில் அவ்வப்போது தலை காட்டினார் ஜான்வி. இதனால் அமீர்கான் படத்தில் அறிமுகமாகிறார் என முதலில் சொல்லப் பட்டது. ஆனால், தான் அமீரின் ரசிகை என்பதால் அவரைச் சந்தித்தேன் என விளக்கமளித்தார் ஜான்வி.

பேச்சுவார்த்தை தோல்வியா..?

பேச்சுவார்த்தை தோல்வியா..?

அதனைத் தொடர்ந்து, கரண் ஜோஹர் படத்தில் ஜான்வி அறிமுகமாகிறார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால் அதுவும் பொய்த்துப் போனது.

கேப்டன் மகன் ஜோடியாக மயிலு மகள்....

கேப்டன் மகன் ஜோடியாக மயிலு மகள்....

தமிழில் கூட நம்ம கேப்டன் மகன் அறிமுகமாகும் படத்தில் அவரது ஜோடியாக ஜான்வி அறிமுகமாகிறார் என்ற தகவல் காட்டுத் தீயாய் பரவியது. அதனால் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது எனச் சொல்லப் பட்டது.

நோ ஐடியா....

நோ ஐடியா....

இந்நிலையில், ஜான்வியை இப்போதைக்கு சினிமாவில் அறிமுகப் படுத்தும் ஐடியாவில் ஸ்ரீதேவி இல்லை என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பர்ஸ்ட் டிகிரி... அப்புறம் தான் ஆக்டிங்

பர்ஸ்ட் டிகிரி... அப்புறம் தான் ஆக்டிங்

தற்போது 16 வயதாகிறது ஜான்விக்கு. எனவே, ஜான்வியை மேற்கொண்டு படிக்க வைக்கும் திட்டத்தில் உள்ளாராம் ஸ்ரீதேவி. ஜான்வி தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் தான் சினிமா பற்றி சிந்திக்க உள்ளாராம் ஸ்ரீதேவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X