ஆலுமா டோலுமா.. மயிலின் மகளையே மயக்கிய விஜய்... 3 'வுட்'டும் சும்மா தெறிக்குதுல்ல!
சென்னை: விஜய்... இந்த பெயருக்கு பின்னால்தான் பித்துப் பிடித்துப் போய் திரிகிறார்கள் இந்திய நடிகைகள்.
பாலிவுட்டின் லேடி பாஷாவாக இருந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிலிருந்து மலையாளத்தின் ஸீன் அவுட் நடிகை சனுஷா வரையில் ஆளாளுக்கு இந்தப் பெயர் பின்னாடிதான் திரிகிறார்கள்.
ஆஹா நம்ம தளபதிக்கு இந்த வயசுலேயும் இப்படியொரு கிரேஸா?! என்று குதிக்காதீர்கள் கோலிவுட் தளபதி விஜய்யின் ரசிகர்களே. நாம் சொல்வது டோலிவுட்டின் இளம் புயலான 'விஜய் தேவரகொண்டா'வை.

அர்ஜூன் ரெட்டி
ஆம்! அர்ஜூன் ரெட்டி, கீதகோவிந்தம், டியர் காம்ரேட்! என்று தொடர்ந்து துள்ளு கதைகளாக நடித்து, ஹிட்டடித்து அக்கட இக்கட என அல்லு தெறிக்கவிடும் விஜய் தேவரகொண்டாவின் பின் தான் டோட்டல் இந்திய திரையுலகின் சின்ன பொண்ணுங்களும் கிரேஸாகி கிடக்கிறார்கள்.

மயிலே மயிலே
அதிலும், ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி ‘எனக்கு பிடித்த நடிகர்' என சுட்டிக் காட்டியது விஜய் தேவரகொண்டாவைதான். பொதுவாக பாலிவுட் நடிகைகள், தென்னிந்திய ஹீரோக்களை கண்டுக்கவே மாட்டார்கள். ஆனால் விஜய் விஷயத்தில் அது தலைகீழானதால் பாலிவுட்டே அதிர்ந்தது.

ரொமான்ஸ்
ஆக அந்த ஒன் லைன் ரெஃபரன்ஸை வைத்துக் கொண்டு, இதோ ஜான்வியை விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்துக்கு புக் செய்ய இருக்கிறார்கள். டியர் காம்ரேட் ஹிட்டுக்குப் பின் விஜய்யின் அடுத்தபடத்தை இயக்குகிறார் டோலிவுட்டின் ஹிட் இயக்குநரான பூரிஜெகன்நாத். இதை அவரது கேர்ள் ஃப்ரெண்டான ஷார்மி தயாரிக்கிறார்.

ஒரே நேரத்தில்
இந்தப் படத்தில்தான் தேவரகொண்டாவின் ஜோடியாக ஆகிறார் ஜான்வி என்கிறது டோலிவுட் பட்சி ஒன்று. தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்தப் படத்தின் மூலமும், தனது அப்பா போனிகபூர், தல அஜித்குமாரை வைத்து எடுக்கும் இரண்டாவது தமிழ் படத்தின் மூலமும் ஒரே நேரத்தில் தென்னிந்திய சினிமாவின் இரண்டு ஜானர்களில் அறிமுகமாகிறார் ஜான்வி! என்கிறார்கள்.
ஆக, மயிலு மகளே வாம்மா.. வாசமுள்ள படங்களாக தாம்மா.. அதானடா!!
- ஜி.தாமிரா


Click it and Unblock the Notifications











