வாவ்.. சூப்பர்ஸ்டார் மகனையும், லேடி சூப்பர்ஸ்டார் மகளையும் இணைக்கும் படம்!
இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஷாருகான் மகன் ஆர்யன் நாயகனாக அறிமுகமாகும் படத்தில், மறைந்த லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மும்பை: இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஷாருகான் மகன் ஆர்யன் நாயகனாக அறிமுகமாகும் படத்தில், மறைந்த லேடி சூப்பர்ஸ்டார் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்தி திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் நடிகை ஸ்ரீதேவியின் கனவு என்றால், அது அவரின் மகள்களைத் திரைப்படத்தில் கதாநாயகியாகப் பார்க்க வேண்டும் என்பதுதான். அதற்காக பல முயற்சிகளை எடுத்த ஸ்ரீதேவியால் அதை தனது கண்களால் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பிறகு, அவரது முத்த மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடித்த முதல் படம் "தடக்" திரைக்கு வந்து வெற்றியும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷிகபூர் தற்போது இந்தி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இந்த படத்தில் குஷிகபூர்க்கு ஜோடியாக இந்தி சூப்பர்ஸ்டார் ஷாருகான் மகன் ஆர்யன் நடிக்கிறார். அவர் முதல் முறையாக நாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாபெரும் நடிகர்களின் வாரிசுகள் இணையும் இந்தப் படத்திற்கு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகிவுள்ளது. மேலும் இந்தப் படத்தை பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











