ஸ்ரீதேவி மரணம் ஒரு கொலை: கேரள டிஜிபி கட்டுரையால் கிளம்பிய பூதம்
Recommended Video
திருவனந்தபுரம்: நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல அது கொலை என்று கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் தங்கள் பங்கிற்கு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.
நடிகை ஸ்ரீதேவி தனது நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் ஹோட்டலில் உள்ள குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார். மதுபோதையில் அவர் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் உயரமான ஸ்ரீதேவி நீச்சல் தொட்டி நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பே இல்லை, இது திட்டமிட்ட கொலை என்று அப்பொழுது பேச்சு கிளம்பியது.

கட்டுரை
கேரள காவல்துறை ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் இருந்த டாக்டர் உமாதாதன் குறித்து கேரள டிஜிபி ரிஷிராஜ் மலையாள நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது, என் நண்பரும், தடயவியல் நிபுணருமான டாக்டர் உமாதாதன் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் கருத்து தெரிவித்தார். ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறக்கவில்லை அது கொலையாகத் தான் இருக்கும் என்றார் அவர். ஸ்ரீதேவியின் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்று நான் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

கொலை
ஒரு அடி ஆழ நீரில் யாரும் மூழ்கி இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த குளியல் தொட்டி நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்துக் கொண்டு தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும் என்றார் உமாதாதன் என ரிஷிராஜ் சிங் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

உமாதாதன்
கேரள போலீஸ் பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியவர் உமாதாதன். அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளார். டாக்டர் உமாதாதன் கடந்த புதன்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் ரிஷிராஜ் சிங் ஸ்ரீதேவி பற்றியும் தெரிவித்துள்ளார்.

போனி கபூர்
ஸ்ரீதேவி இறந்தது குறித்து அவரின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் முன்பு தெரிவித்ததாவது, டின்னருக்கு வெளியே போகலாம் என்று ஸ்ரீயிடம் கூறினேன். நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று பாத்ரூமுக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை. இதையடுத்து நான் பாத்ரூம் கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார் என்றார்.


Click it and Unblock the Notifications











