நாத்தனார் மகன் திருமண விழாவில் இறந்த ஶ்ரீதேவி.. மருமகன் உருக்கமான இரங்கல்!

By Vignesh Selvaraj

Recommended Video

அம்மா வேணும்: கதறும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி- வீடியோ

சென்னை : நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமா தாண்டி இந்திய திரையுலகிலும் ஆதிக்கம் செலுத்தியவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி பின்னர் கதாநாயகியாக பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தார்.

இந்தியத் திரையுலகில் கனவுக் கன்னியாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானார்.

ஶ்ரீதேவியின் நாத்தனார் மகன் திருமணத்திற்காகத் தான் துபாய் சென்றிருந்தார். இந்நிலையில், திருமண மாப்பிள்ளை மோஹித், தனது அத்தை ஶ்ரீதேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.

இந்தியா எடுத்து வரப்படும் ஶ்ரீதேவியின் உடல்

இந்தியா எடுத்து வரப்படும் ஶ்ரீதேவியின் உடல்

ஶ்ரீதேவி இறந்த செய்தி இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மருத்துவ பரிசோதனைகள் காரணமாக அவரது உடல் இந்தியா வருவதற்குக் காலதாமதம் ஆகிறது. இன்று மாலை இந்தியா வந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

நாத்தனார் மகன் திருமணம்

நாத்தனார் மகன் திருமணம்

தனது நாத்தனார் (போனி கபூரின் சகோதரி) இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீதேவி துபாய் சென்றிருந்தார். தனது கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷி கபூர் ஆகியோருடன் திருமண விழாவில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார்.

சனிக்கிழமை இரவு

சனிக்கிழமை இரவு

சனிக்கிழமை இரவு நடந்த திருமண விழாவில் பச்சை நிறத்தில் ஜொலிக்கும் உடையணிந்து ஸ்ரீதேவி கலந்து கொண்டார். இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகையும், ஶ்ரீதேவியின் உறவினருமான சோனம் கபூரும் கலந்து கொண்டார்.

கடைசி நிகழ்ச்சி

நிகழ்ச்சி முடிந்து புறப்படுவதற்கு முன் அங்கிருந்த அனைவரையும் நோக்கி கையசைத்து, முத்தம் கொடுத்து விட்டு சென்றுள்ளார் ஸ்ரீதேவி. இது தான் ஸ்ரீதேவி கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அங்கிருந்து தான் தங்கியிருந்த அறைக்குச் சென்ற ஸ்ரீதேவிக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

துக்க வீடான திருமண வீடு

துக்க வீடான திருமண வீடு

இதனையடுத்து சிறிது நேரத்திலேயே ஶ்ரீதேவியின் உயிர் பிரிந்துள்ளது. ஸ்ரீதேவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனால், போனி கபூர் மருமகனின் திருமண நிகழ்வு துக்கத்தை ஏற்க வேண்டிய சூழலுக்கு வந்துள்ளது.

வெற்றிடம் எப்போதும் உணரப்படும்

இந்நிலையில், திருமணம் நடைபெற்ற ஶ்ரீதேவியின் மருமகன் மோஹித் மார்வா, தனது அத்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஶ்ரீதேவியின் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' பட புகைப்படத்தை பகிர்ந்து, 'நீங்கள் லெஜண்ட் என குறிப்பிடப்படுவதை விட உயரம்.. உங்கள் வெற்றிடம் எப்போதும் எங்களால் உணரப்படும்" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X