அப்படி இருந்த மயிலு மகளா இப்படி ஆகிவிட்டார்?: வியப்பில் பாலிவுட்
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி ஸ்லிம்மாக மாறியதை பார்த்து தான் பாலிவுட் வியப்பில் ஆழ்ந்துள்ளது.
நடிகை ஸ்ரீதேவி-போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான ஜான்வி எப்பொழுதுமே ஒல்லியாகத் தான் உள்ளார்.
இளைய மகள் குஷி சில மாதங்களுக்கு முன்பு வரை குண்டாக இருந்தார்.

புகைப்படம்
ஸ்ரீதேவி குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட சென்ற இடங்களில் எடுத்த புகைப்படங்களில் எல்லாம் குஷி மட்டும் குண்டாக தெரிவார். ஸ்ரீதேவியும், ஜான்வியும் ஒல்லியாக இருப்பார்கள்.

குஷி
ஜான்வியை பார்த்தவர்கள் எல்லாம் இந்த பொண்ணு எவ்வளவு அழகாக இருக்கிறது. ஆனால் தங்கை குஷி அப்படி இல்லையே. குண்டாக இருக்கிறாரே என்றார்கள்.

ஒல்லி
குண்டாக இருந்த குஷி கபூர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாகிவிட்டார். அக்கா ஜான்விக்கு இணையான அழகியாகிவிட்டார்.

வியப்பு
அப்படி இருந்த குஷியா இப்படி ஆகிவிட்டார் என்று பாலிவுட்காரர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். நிகழ்ச்சிகளுக்கு அக்காவும், தங்கையும் வந்தால் அனைவரின் கண்களும் அவர்கள் மீது தான்.


Click it and Unblock the Notifications











