விரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்!

By

மும்பை: மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் இரண்டாவது மகளும் ஹீரோயின் ஆக இருக்கிறார்.

இந்தி தயாரிப்பாளர் போனி கபூர்- நடிகை ஸ்ரீதேவி தம்பதிக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள்.

ஶ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடந்த, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மரணமடைந்தார்.

அங்ரேஸி மீடியம்

அங்ரேஸி மீடியம்

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், தடக் என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் நடித்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே நடிகை ஶ்ரீதேவி உயிரிழந்தது சோகம். தடக் கவனிக்கப்பட்டதை அடுத்து நெட்பிளிக்ஸுக்காக கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடரில் நடித்தார்.

கெஸ்ட் ரோல்

கெஸ்ட் ரோல்

பின்னர், அங்ரேஸி மீடியம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார், ஜான்வி. அடுத்து குஞ்சன் சக்சேனா என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் முழுமையாக நடித்து வெளியான திரைப்படங்கள் இரண்டுதான். அடுத்து ரூஹி அஃப்ஸானா, தோஸ்தானா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

குட்லக் ஜெர்ரி

குட்லக் ஜெர்ரி

இதில், ரூஹி அஃப்ஸானா படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இப்போது, குட்லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழில் நயன்தாரா நடித்து வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக். இதை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்து வருகிறார். சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார்.

குஷி கபூர் ஆர்வம்

குஷி கபூர் ஆர்வம்

இந்நிலையில், ஜான்வி கபூர் போல, குஷி கபூரும் எப்போது ஹீரோயின் ஆவார் என்று போனி கபூரிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் அவர் இப்போது அதற்கு பதில் அளித்துள்ளார். குஷியும் நடிப்பில் ஆர்வமாக இருப்பதாகவும் விரைவில் அதற்காக அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் போனி கபூர் கூறியுள்ளார்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

அவர் கூறும்போது, நான் தயாரிப்பாளராக இருந்தாலும் குஷியை நான் அறிமுகம் செய்யவில்லை. நான் மதிக்கும், பாதுகாப்பாக உணரும் மற்றொரு தயாரிப்பு நிறுவனம் அவரை அறிமுகப்படுத்தும். குஷி, தனக்கான வழியை அவராகவே தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X