Rajinikanth - ரஜினியைவிட அதிக சம்பளம் வாங்கிய நடிகை.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த்தைவிடவும் நடிகை அதிக சம்பளம் வாங்கியிருக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது.

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் எந்தவித பின்னணியும் இல்லாமல் சினிமா ஆசையில் சினிமா பல்கலைக்கழகத்தில் இணைந்து நடிப்பை கற்றுக்கொண்ட அவர் கே பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது கரியர் ஆரம்பத்தில் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் வில்லனாகவும் நடித்தவர் அவர்; பிறகு தனது திறமையை வளர்த்து ஸ்டைலின் துணையோடு ஹீரோவாகி இந்திய அளவில் இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பது அனைவரும் அறிந்தது தான்.

Sridevi Shares a experience about Rajinikanth And Moondru Mudichu Movie

ஜெயிலர்: ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் அந்த படத்துக்காக அவர் 90 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் ரஜினியை விட நடிகை ஒருவர் அதிக சம்பளம் பெற்றிருப்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதுதொடர்பாக ஸ்ரீதேவி பேசியிருப்பது திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன நடந்தது: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் கதாநாயகியாக நடித்த முதல் படம் மூன்று முடிச்சு. கே.பாலசந்தர் இயக்கிய அந்தப் படத்தில் நடிக்க எனக்கு 5,000 ரூபாய் சம்பளம், ரஜினிக்கு இரண்டாயிரம் ரூபாய். கமல் ஹாசன் அப்போதே ஸ்டார் என்பதால் அவருக்கு மட்டும் முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.

Sridevi Shares a experience about Rajinikanth And Moondru Mudichu Movie

அம்மாவுடன் நெருக்கம்: ரஜினிகாந்த்தும் எனது அம்மாவும் ரொம்பவே நெருக்கம். அவரை தன் மகன் போன்றுதான் நினைத்துக்கொண்டார் எனது அம்மா. ஒருநாள் ஷூட்டிங் பிரேக்கில் நான், ரஜினி, எனது அம்மா மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ரஜினி எனது அம்மாவிடம்; ஏன் அம்மா நானும் எப்போது கமல் ஹாசன் மாதிரி பெரிய ஸ்டார் ஆவது என கேட்டார். அதற்கு என் அம்மாவோ நிச்சயம் நீ ஒருநாள் கண்டிப்பாக பெரிய ஸ்டாராக மாறுவீர்கள் என நம்பிககி அளித்தார். 30,000 ரூபாய் சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான் ரஜினியின் ஆசையாக இருந்தது.

கமல் சிரித்தார்: மூன்று முடிச்சு படத்தின் ஒரு காட்சியில் கமல் ஹாசன் ஏரியில் விழுந்துவிடுவார். ரஜினி உதவி செய்யமாட்டார். போயிட்டாரே போயிட்டாரே என்று வசனம் பேச வேண்டும்.ஆனால் நானோ சென்னை பாஷையில் பூட்டாரே பூட்டாரே என்று சொன்னேன். அதனைக் கேட்டு படகை பிடித்துக்கொண்டிருந்த கமல் சிரித்துவிட்டார். உடனே பாலசந்தரோ படகு ஏன் ஆடுது என கத்தினார். ஒருவழியாக சமாளித்துவிட்டோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X