சிவகாசி சரவெடி ஸ்ரீதேவி.. 57வது பிறந்த தினம் அனுசரிப்பு.. டிரெண்ட் செய்யும் தல ரசிகர்கள் #Sridevi

சென்னை: கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது நடிப்பு ஆற்றலால் கலக்கி வந்த நடிகை ஸ்ரீதேவியின் 57வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

Sri Devi Birthday Special:Unkown Facts of Female Super Star| Filmibeat Tamil

பாலிவுட் ரசிகர்கள் முதல் கோலிவுட்டின் தல அஜித் ரசிகர்கள் வரை #Sridevi என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவியின் நினைவுகளை பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

சிவகாசி சரவெடி

சிவகாசி சரவெடி

நயன்தாராவுக்கு எல்லாம் முன்னதாக லேடி சூப்பர்ஸ்டாராக இந்திய திரையுலகையே கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக அப்போதே வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டின் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்து பாலிவுட்டில் தனக்கென தனி சிம்மாசனம் உருவாக்கிக் கொண்டவரின் 57வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

4 வயதில்

4 வயதில்

1967ம் ஆண்டு வெளியான கந்தன் கருணை படத்தில் குழந்தை முருகனாக 4 வயதே ஆன ஸ்ரீதேவி நடித்து சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆரின் நம் நாடு, சிவாஜியின் பாபு உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கிய ஸ்ரீதேவி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார்.

கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் உயிரிழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார். அவரது மரணம் விபத்து என துபாய் போலீசார் அறிவித்து இருந்தனர். ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை போலவே ஸ்ரீதேவியின் மரணத்திலும் பாலிவுட் மாஃபியா கை வரிசை இருப்பதாகக் கூறி அதற்கும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர் தல அஜித் ரசிகர்கள். தல அஜித்துடன் இணைந்து கடந்த 2012ம் ஆண்டு இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதேவி. நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க காரணமும் ஸ்ரீதேவி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

அம்மா ஸ்ரீதேவியுடன் இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நடிகை ஜான்வி கபூர், ஐ லவ் யூ மம்மா என இந்த நாளில் தனது தாயை நினைத்து உருகி உள்ளார். சமீபத்தில் வெளியான ஜான்வி கபூரின் கஞ்சன் சக்ஸேனா படம் கலவையான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X