தேவதையை கண்டேன் ஸ்ரீதேவி விஜயகுமாரை ஞாபகமிருக்கா? அவருடைய மகள் எப்படி வளர்ந்துட்டாரு பாருங்க!

சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமாரின் மகளின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், அதன் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

நடிகர் விஜயகுமாரின் குடும்பமே சினிமா குடும்பம் என்றால் அது மிகையாகாது. நடிகர் விஜயகுமார் அவருடைய மனைவி மஞ்சுளா, மகன் அருண் விஜய், மகள்கள் வனிதா, ப்ரீத்தி, ஸ்ரீதேவி என ஒட்டுமொத்த பேரும் நடிகர்கள் தான்.

சத்யராஜின் ரிக்‌ஷா மாமா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி விஜயகுமார் இப்போ எப்படி இருக்கிறார் என பார்த்த ரசிகர்கள் செம ஷாக் ஆகி உள்ளனர்.

Sridevi Vijayakumar celebrates her daughter birthday and shares pics

தேவதையை கண்டேன் படத்தில் பார்த்தது போலவே: மாதவனின் பிரியமான தோழி படம் ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு செம பிரேக் கொடுத்த திரைப்படம். அதன் பின்னர், ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே படம் ஹீரோயினாக அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

2005ம் ஆண்டு தனுஷுக்கு ஜோடியாக "தேவதையை கண்டேன்" படத்தில் "அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்.. நீ என் மனைவியாக வேண்டுமென்று" என தனுஷ் எப்படி வர்ணித்து பாடினாரோ அதே அழகுடன் இந்த வயதிலும் ஸ்ரீதேவி விஜயகுமார் செம க்யூட்டாக உள்ளார்.

சினிமாவில் இருந்து விலகல்: தேவதையை கண்டேன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவிலேயே ஸ்ரீதேவி விஜயகுமார் நடிக்கவே இல்லை. தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்தார். 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு 2016ம் ஆண்டு ரூபிகா எனும் மகள் பிறந்தார்.

2016ம் ஆண்டு வரை தெலுங்கு படங்களில் ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தையை பெற்ற பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார்.

மகள் பிறந்தநாள்: இந்நிலையில், சமீபத்தில், ஸ்ரீதேவி விஜயகுமார் தனது மகள் ரூபிகாவின் பிறந்தநாளை கணவர், அப்பா, அக்கா என குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Sridevi Vijayakumar celebrates her daughter birthday and shares pics

ஸ்ரீதேவிக்கு 7 வயதில் இப்படியொரு மகள் இருக்கிறாரா? என ரசிகர்கள் பொண்ணு நல்லா வளர்ந்து விட்டாரே என கமெண்ட் போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

கணவர் செம ஹேண்ட்ஸம்: நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இன்னமும் செம ஸ்லிம்மாக ஹீரோயின் போலவே உள்ள நிலையில், அவரது கணவர் அவரை விட செம ஹேண்ட்ஸமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், நீங்க ரெண்டு பேரும் ஜோடியாக இப்போ கூட ஒரு படத்தில் நடிக்கலாம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தாத்தா விஜயகுமார் பேத்தியை கொஞ்சும் போட்டோக்களும் வெளியாகி உள்ளன. அருண் விஜய் மட்டும் இந்த பர்த்டே பார்ட்டியில் மிஸ் ஆகி உள்ளார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X