அக்கா வனிதாவை போலவே டிவி நிகழ்ச்சியில் ஜட்ஜ்ஜாக போகும் ஸ்ரீதேவி.. எந்த சேனல்லன்னு பாருங்க!

சென்னை: வனிதா விஜயக்குமாரை போன்றே அவரது சகோதரி ஸ்ரீதேவி விஜயக்குமாரும் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வனிதா விஜயக்குமாரின் சகோதரிகளில் ஒருவர், ஸ்ரீதேவி விஜயக்குமார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோயினாக தெலுங்கில் ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. அதனை தொடர்ந்து தமிழில் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

ராகுலுடன் திருமணம்

ராகுலுடன் திருமணம்

தொடர்ந்து பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையை கண்டேன் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி கன்னட படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி.

மீண்டும் டிவி சேனலில்..

மீண்டும் டிவி சேனலில்..

அதன் பிறகு அதிகம் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ரீதேவி சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் தற்போது டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜட்ஜ்ஜாகும் ஸ்ரீதேவி

ஜட்ஜ்ஜாகும் ஸ்ரீதேவி

அதாவது தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளாராம் ஸ்ரீதேவி.
இதில் நடன இயக்குநரும் டிவி பர்சனாலிட்டியுமான ஷேகர் மாஸ்டருடன் இணைந்து நடுவராக பணியாற்ற உள்ளார்.

விரைவில் டெலிகாஸ்ட்

விரைவில் டெலிகாஸ்ட்

இந்த நிகழ்ச்சியை வர்ஷினி சவுந்தர்ராஜன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி விரைவில் டெலிகாஸ்ட் ஆகவுள்ளது. பிரபல காமெடி நடிகர்களான லாஸ்யா மற்றும் அவினாஷ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

ஏற்கனவே அதுர்ஸ் சீசன் 2

ஏற்கனவே அதுர்ஸ் சீசன் 2

நிகழ்ச்சி குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி அதுர்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நடிகர், தயாரிப்பாளர், டிவி நடுவரனா நாகபாபு கொனிடிலாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

கணவர் மற்றும் மகள்

கணவர் மற்றும் மகள்

தெலுங்கில் ரவி தேஜாவுடன் வீரா மற்றும் செல்போன் ஆகிய இரண்டு படங்களில் நடித்த பிறகு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி தனது கணவர் ராகுல் மற்றும் மகள் ரூபிக்காவுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

மகளுடன் வாழ்த்து

மகளுடன் வாழ்த்து

அவரது இன்ஸ்டாகிராம் முழுக்கவும் அப்பா விஜயக்குமார், கணவர் ராகுல் மற்றும் மகள் ரூபிக்காவுடன் இருக்கும் போட்டோக்களே நிரம்பி வழிகிறது. சங்கராந்தி பண்டிகைக்கு கூட தனது மகளுடன் இருக்கும் போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியிருந்தார் ஸ்ரீதேவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X