வேற டிரஸ் இல்லயா? விருது விழாவிற்கு இப்படியா வருவது.. ஜான்வி கபூரின் தங்கையை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தமிழில் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடித்து வரும் நிலையில், தங்கையும் அவருக்கு போட்டியாக கிளாமரில் களமிறங்கி இருக்கிறார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன் உயிரிழந்தார். ஸ்ரீதேவி - போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூரும் அம்மாவைப் போல நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் தமிழில் மெகா ஹிட் அடித்த லவ்டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விளாசும் பேன்ஸ்: இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை குஷி கபூர், குட்டி ட்ரவுசர் மற்றும் ஷர்ட்டுடன் வந்தார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் எங்க பார்த்தாலும் பாக்கெட்டாத்தான் இருக்கு என்றும், வேற டிரஸ் இல்லயா என்றும் கேட்டு வருகின்றனர். ஜான்வி கபூர் தாராளமாக கவர்ச்சி காட்டி படங்களில் நடித்து வரும் நிலையில், அவரின் தங்கையும் அவருக்கு போட்டியாக அதிரடி கவர்ச்சி காட்ட தொடங்கி இருக்கிறார்.

இணையத்தில் கசிந்த போட்டோ: குஷி கபூர் நடித்த படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இவர் நடிகையாவதற்கு முன்பே அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அண்மையில், பாலிவுட் நட்சத்திரங்களின் வாரிசுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில், குஷி கபூர், நடிகை பூமி பெட்னேக்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் வாரிசுகளும், பில்லியனர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டுள்ளனர். இதில், போதை தலைக்கு ஏறிய நிலையில் குஷி கபூர். நடிகை பூமி பெட்னேக்கர் ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சென்சார் போர்டு உறுப்பினரும், சினிமா விமர்சகருமான உமர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி பலரும், குஷி கபூரை திட்டிதீர்த்தனர்.


Click it and Unblock the Notifications











