கோனா வெங்கட் கதையில் 3 மொழிகளில் தயாராகும் ஸ்ரீதேவியின் புதிய படம்

சென்னை: தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற எழுத்தாசிரியரான கோனா வெங்கட் கதையால் ஈர்க்கப்பட்டு மீண்டும் ஒரு பன்மொழித் திரைபடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் நடிகை ஸ்ரீதேவி.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த நடிகை ஸ்ரீதேவி கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப்ப் பிறகு இங்கிலீஷ், விங்கிலீஷ் படத்தில் நடித்தார். அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் ஸ்ரீதேவி.

அதற்காக கதை தேர்வு செய்து வந்தவருக்கு கோனா வெங்கட்டின் கதையொன்று மிகவும் பிடித்துப் போய் விட்டதாம்.

இப்பவும் ஹீரோயின் தான்....

இப்பவும் ஹீரோயின் தான்....

வயதானாலும் ‘அக்கா, அண்ணி, அம்மா போன்ற வேடங்கள் எல்லாம் வேண்டாம்' என ஏற்கனவே ஸ்ரீதேவி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, அவரைச் சுற்றி கதையோட்டம் உள்ள படமாக தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார் ஸ்ரீதேவி.

கோனா வெங்கட் கதையில்...

கோனா வெங்கட் கதையில்...

அதன்படி, கோனா வெங்கட் கதையொன்று தற்போது ஸ்ரீதேவியை மிகவும் ஈர்த்துள்ளதாம். எனவே, அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் ஸ்ரீதேவி.

3 மொழிகளில்.....

3 மொழிகளில்.....

பன்மொழி ரசிகர்களைக் கொண்ட ஸ்ரீதேவியின் இப்படமும் 3 மொழிகளில் உருவாக இருக்கிறதாம். இப்படத்தை அவரது கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார்.

ஸ்ரீதேவியின் சம்மதம்....

ஸ்ரீதேவியின் சம்மதம்....

இப்படத்தின் கதை தெலுங்குத் திரையுலகின் புகழ் பெற்ற எழுத்தாசிரியரான கோனா வெங்கட் உடையது. ஸ்ரீதேவி தனது படத்தில் நடிக்க சம்மதித்து இருப்பதாகவும், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் கோனா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X