அன்றே கணித்த பாலச்சந்தர்.. சஹானா ஸ்ரீதர் பெயர் வந்தது எப்படி தெரியுமா?

சென்னை: இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் ஸ்ரீதரன். இதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடி்தது பிரபலம் அடைந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் சீரியலில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிதது வந்தார். இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது அவர் இயக்குநர் பாலச்சந்தர் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் கே.பாலச்சந்தர் வெள்ளித்திரையில் புதுமையான படைப்புகள தந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அதேபோன்று அவர் இயக்கிய சீரியல்களில் பல திறமையான நடிகர்களை அறிமுகப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. அதில், ரஜினி, கமல், நாசர், விவேக், சமுத்திரக்கனி என லெஜன்ட் நடிகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதேபோன்று சஹானா சீரியலில் நடிகர் ஸ்ரீதரன் என்பவரை பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது சிஷ்யனாக நடிகர் ஸ்ரீதரன் செய்த செயல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

sridhars-video-talking-about-director-balachander-goes-viral

பாலச்சந்தரின் சிஷ்யன்: மறைந்த நடிகர் பாலச்சந்தரின் 94ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஸ்ரீதரன் அவருக்கு மரியாதை செய்தார். அப்போது ஸ்ரீதரன் பேசியதாவது, பாலச்சந்தர் சார் எனக்கு குரு. அவரது குருகுலத்தில் வளர்ந்தவன் என்பதை சொல்ல பெருமிதமாக இருக்கிறது. அவர் வளர்த்த சிஷ்ய பிள்ளைகளில் நானும் ஒருவனாக இருக்கிறேன். இன்று அவரது 94ஆவது பிறந்தநாளை நடிகர்கள் அனைவரும் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என ஸ்ரீதரன் தெரிவித்தார். பின்பு பேசிய அவர், சஹானா சீரியலில நடிக்க வாய்ப்பு வந்த போது தயங்கினேன். ஆனால் அவர் தந்த ஊக்கம் என்னை மாற்றிவிட்டது. உன்னால் முடியும் என நம்பினால் மட்டும் வந்து அந்த செயலை செய். இல்லையென்றால் அதை செய்யாதே.

சஹானா சீரியல் உனக்கு நல்ல நடிகனாக மாற்றும் என்பதை உறுதியாக சொல்கிறேன். மக்கள் உன்னை மறக்காத கதாப்பாத்திரமாக இருக்கும் என பாலச்சந்தர் சார் கூறியதாக ஸ்ரீதரன் தெரிவித்தார். அவர் கூறியது போலவே இன்று நான் நல்ல நடிகனாக மாறியிருக்கிறேன். நான் வாழும் வாழ்க்கை அவர் தந்தது என நெகிழ்ச்சியுடன் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

sridhars-video-talking-about-director-balachander-goes-viral

மிஸ் யூ அப்பா: ஸ்ரீதரன் மறைவு செய்தி அறிந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி அவருக்கு சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வள்ளியின் வேலன் சீரியலில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்து பலருக்கும் பிடித்த தந்தையாக மாறிவிட்டார். இவரது இறப்பை ஏற்காத ரசிகர்கள் மிஸ் யூ அப்பா என பதிவிட்டு வருகின்றனர். வள்ளியின் சீரியலில் நடித்த கம்பன் மீனா நடிகையும் அவரை பற்றி பல விசயங்களை தெரிவித்திருக்கிறார். செட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். யாரிடமும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் நடந்துகொள்வார். நல்ல அப்பாவும் கூட. மிஸ் யூ அப்பானு சொல்ல மனசு வரலை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை என கம்பன் மீனா தெரிவித்துள்ளார். அவருடன் நடித்த சக நடிகர்கள் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X